ஓ...காதல் நெஞ்சே 19-24

ஓ...காதல் நெஞ்சே 19-24

அத்தியாயம்-19

அடுத்து வந்த நாட்களில் காவ்யாவின் மொபைலும் சுவிட்சுடு ஆஃப். அஷய்க்கு பைத்தியம் பிடித்த நிலை...

எப்படி காவ்யாவை சந்திக்கபோறோம்.

அவள் என்னைவிட்டு போய்டுவாளா? நான் வாழக்கையில ஆசைப்பட்ட ஒரே விசயம் என் காதல் கைகூடனும்னுதான், அதுவும் இல்லை இந்த வாழ்க்கை எனக்குமட்டும் ஓரவஞ்சனை பண்ணுது என்று வேதனையோடு இருந்தான். காவ்யாவை நினைத்து புலம்பினான்.

இரவில் ஷ்ரவன் வீட்டில் வந்து குடித்துவிட்டு ஒரே உளறல்தான். அவன் உளறலைக்கேட்ட ஷ்ரவனுக்கோ ஹரிதாவின் நியாபகம் வந்தது. உடனே ஹரிதாவை அழைத்தவன் "ரிது பேபி, உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்டி, எப்போ வருவ” என்று நேரடியாகவே கேட்டான்... அவளுக்கோ சந்தோஷம் அவனாகவே கேட்டது.

ஹரிதா " நானும் மிஸ் பண்றேன் சீக்கிரம் வந்திடுவேன்.இப்போ கொஞ்சம் ஹெல்த் பரவாயில்லை. என்னப்பா தீடீர்னு,என் மேல உள்ளக்கோபம் குறைஞ்சிட்டா"

ஷ்ரவன் “அடியே பொண்டாட்டி நான் எப்போடி கோபப்பட்டேன். அது நீ எதாவது செய்துவைக்கிற அந்தக் காரணத்துக்காகத்தான் கோபம் வந்திருக்கும்... உன் மேல எப்படிடி கோபம் வரும்."

"ஷ்ரவன் பாசம் ஓவராப் பொங்குது... என்ன விசயம்"

“ அதுவா இந்த அஜய் அவன் காதலிய நினைச்சு நினைச்சு குடிச்சானா, நானும் அவனுக்கு கம்பெனிக்குடுக்க பீர் குடிச்சேன் பேபி... அவன் அவனோட காதலியை நினைச்சு ஃபீல் பண்றான். நான் என்னோட காதலிக்கு போன் பண்ணிப்பேசுறேன்"

ஹரிதாவிற்கோ அவனின் வாயால் தான் இன்னும் அவனின் மனதில் காதலியாகத்தான் இருக்கின்றோம் என்றதும், அடிவயித்திலிருந்து உணர்வுகளின் பிரவாகம் எழுந்தது... அப்படியே அவனுக்கு வீடியோ அழைப்புவிடுக்க இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"முடியலடி உன்கிட்ட வரணும்போல இருக்கு... வரட்டுமா" என ஷ்ரவன் கண்கள் கிறங்க கேட்டான்.

ஹரிதாவிற்கோ தனது பழைய காதல் வாழ்க்கை மீண்டுவிட்டதற்காக மிகவும் சந்தோஷம்.

பேசி பேசியே கைப்பேசியும் களைப்புற்றதும்தான் தூங்கினார்கள். 

மறுநாள் ஆபிஸில் சந்தித்துக்கொண்டனர் மூவரும், அஜயின் முகமே வாடி கலையிழந்து இருந்தான். ஹரிதாவை அழைத்த ஷ்ரவன் அவள் உள்ளே வந்ததும் ஒன்றுமே பேசாமல் அவளை அப்படியே இழுத்துக் கட்டிக்கொண்டான்.

ஷ்ரவன் இப்பொழுது அவளது முகத்தை தன் கையில் தாங்கி “ ஸாரி ரிது பேபி.உன்னை ரொம்பக் காயப்படுத்திட்டேன் ரொம்ப பேசிட்டேன் இல்லை” என்று அவளது கண்களைப்படிக்க... அவளோ “ நான்தான் முதல்ல தொடங்கினேன் பிரச்சனையை என்மேலதான் தப்பு” என்க(ஹப்பா இவங்க தப்பைக் கண்டுபிடிகக்வே மூணு மாசமாயிருக்கு...முடியல)

“ தேங்கஸ் பேபி நீ என் வாழ்க்கையில் வந்ததுக்கு” என்றவன் அவளது கீழுதட்டைக் கவ்வி ஜவ்வு மிட்டாயாக தன் வாய்க்குள் இழுத்தான்.அவளும் அவனுடனே ஒன்ற... அதற்குள் கரடியாக கேபின் கதவு தட்டப்பட. ஏக்கத்திலயே அவளை தன்னிடமிருந்து பிரித்துவிட்டவனைப் பார்த்து சிரித்தாளவள்.

மீண்டும் கதவு தட்டப்பட அனுமதிக்கொடுத்ததும் உள்ளே வந்தது அஜய்தான். தன்னோட ரிப்போர்ட்ஸ் குடுக்க வந்திருந்தான்.

ஷ்ரவன் அவனை நிறுத்தி வைத்தவன், ஹரிதாவிடம் "எனக்கு உதவி செய்யமுடியுமா... காவ்யா வீடுவரைக்கும் போகணும் , உனக்கு சாத்தியப்படுமா" 

“ காவ்யா வீட்டிற்கா? நேத்து எங்க வீட்டுக்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை வச்சுட்டுப் போனாங்க அவங்கப்பா” என்றாள். “இப்போ எப்படிப் போறது, பிரச்சனையாகிட்டுனா?..” எனப்பயந்து யோசித்து நின்றாள்.

அதைக்கேட்டதும் அஜயோ “ நான் என்னோட இடத்திற்குப் போறேன்” என்று வெளியே வந்துவிட்டான்.

ஷ்ரவன் தனது நெத்தியைத் தேய்த்தவன்.

“ ரிது பேபி அஜய்க்காக ஒரு உதவி... காவ்யா வீட்டிற்குப்போய் அவளோட நிலைப்பாடு என்ன,அஜய்க்காக அவனோட வாழ்க்கைக்காக போகமுடியுமா” என்று ஷ்ரவன் கேட்கவும், தலயாட்டியவள் “ முயற்சிப் பண்றேன்” என்றாள். 

வெளியே செல்ல முற்பட மறுபடியும் அவளது கையைப்பிடித்து இழுத்தவன்,

"ரிது பேபி நம்மளோட காதல் வீட்லயும், வெளியவும் எந்த எதிர்ப்பும் இல்லாம சம்மதம் கிடைச்சதுனாலதான் நமக்கு அது அருமைத் தெரியாம இருந்துட்டமோ.

எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு, வீட்லயிருக்கவங்களுக்கும் தொந்தரவுக்கொடுத்திட்டு.அஜய் படுற வேதனையைப் பார்த்துதான் எனக்கு இப்படியெல்லாம் தோணுது” என்று உணர்ந்து பேசினான். 

ஹரிதாவோ அவனது உதட்டினை தனது கையால் பிடித்து வருடியவள் “அப்படிலாம் ஒன்னுமில்ல... ஒரு பிசாசு செய்த சதி அவ்வளவுதான். நீங்க ஏன் ஃபீல் பண்றிங்க” என்று அவனது உதட்டில் முத்தம் வைத்து வெளியே வந்துவிட்டாள்.

மதியத்திற்கு மேல் மேனேஜரிடம் சென்று அனுமதிப்பெற்று.வீட்டிற்கு வந்தவள் தனது மருத்துவமனை ரிப்போர்ட்ஸ் எடுத்து பையில் வைத்தவள்... காவ்யா வீட்டிற்குச் சென்றாள்.

நல்லவேலை அவள் சென்ற நேரம் காவ்யாவின் அப்பா வீட்டிலில்லை,அவளது அம்மாதான் இருந்தார், இவளைக்கண்டதும் வந்து அவளிடம் பேசியவர்,காவ்யாவை அழைக்கவேயில்லை.

ஹரிதாதான் "ஆன்டி, காவ்யாதான் என்னை செக் பண்ணிட்டு இருந்தா... அதுதான் அவளைப் பார்த்து,அடுத்து எங்க செக்ப்போறது, எப்படி என்னனுக் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றதும் அவர் சிறிது யோசித்தவர், ஹரிதாவை நன்றாகத் தெரியும் என்பதாலும் காவ்யாவை அழைத்தார்.

காவ்யாவை பார்த்தவளுக்கு அதிர்ச்சி, கன்னத்தில் எல்லாம் அடிவாங்கியதற்கான தடம்,காவ்யா இவளைக் கண்டதும் சிரித்தாள்... ஆனால் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது.

தன் உயிர்த்தோழியை ஒரு நிமிடத்தில் கண்டுக்கொண்டவள்... “இப்போ நீ செக்கப் பண்ணிடுறியா, அடுத்தமுறை வேற டாக்டரப் பார்க்கிறேன்” என்று சத்தமாகப்பேசவும், அவங்கம்மா உண்மையிலயே ஹரிதா அதற்குத்தான் வந்திருக்கிறாள் என்று உன்னோட “ரூமுக்கு கூட்டிட்டுப்போ காவ்யா இங்க வேண்டாம்” என்றார்.

இதற்குத்தான இருவரும் காத்திருந்தது... காவ்யாவின் அறைக்குள் சென்றதும் தான் அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அப்பா காவலுக்கு வெளிய ஆள் வைத்திருக்காங்க... அம்மாவும் எனக்கு உதவி பண்ணமாட்டுக்காங்க என்ன செய்ய... அஜய்க்கு தகவல் சொல்லமுடியலை” என அழுதாள்

ஹரிதா உடனே ஷ்ரவனுக்கு அழைத்து “என்ன செய்யனும்” என்று கேட்க, “ஒரு ஒருமணி நேரம் எப்படியாவது சமாளிக்கமுடியுமா” என்று கேட்டு என்ன செய்யவேண்டும் என்ற திட்டத்தையும் அவளிடம் கூறினான். பின் தனது அம்மாவிற்கு அழைத்து விசயத்தை கூறி சில விசயங்கள் செய்ய சொன்னான்.

ஹரிதாவிற்கோ பயம், காவ்யாவிற்கோ இங்கிருந்து எப்படியாவது தப்பினால் போதும் என்ற நிலை... எப்படியோ ஒரு மணி நேரத்தைக் கடத்தியவர்கள், ஷ்ரவன் போனில் அழைத்து வெளியே வரச்சொன்னான்.

காவ்யாவின் அம்மாவிடம் சென்று “போயிட்டு வர்றேன்” என்று மெதுவாக நடந்தவளை, கைப்பிடித்து காவ்யாவும் நடக்க முற்பட, அவளது அம்மா கையை பிடித்துக்கொண்டார். கேட்டின் அருகே வந்து ஹரிதா நிற்கவும், வீட்டுனுள்ளே கதவருகில் காவ்யாவுடன் அவளது அம்மாவும் பார்த்து நிற்க.

ஷ்ரவன் காருடன் வந்தான், ஹரிதாவும் காரில் ஏறி அமர்ந்தவுடன் காரின் கதவு திறந்திருக்கவே, காவ்யா அவளது அம்மாவின் கையைப்பிடியை உதறி ஓடிவந்து காரில் ஏறவும், வண்டிக்கிளம்புவும் சரியாக இருந்தது.

காவ்யாவின் அம்மா இதை எதிர்ப்பார்க்கவில்லை, அதிர்ந்து நின்றவர் சத்தமிடுவதற்குள்... ஷ்ரவனின் கார் மறைந்துவிட்டது.

காவ்யாவின் எல்லா சர்டிஃபிகெட்சும், ஹரிதாவின் பேக்கில்.

ஹரிதாவிற்குத்தான் பயத்தில் மூச்சுமுட்டியது... காவ்யா அவளது கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்.

இப்போது கார் சிறிது தூரம் சென்றதும், அஜயும் கீதாம்மாவும் நின்றிருக்க அவர்களையும் வண்டியில் ஏற்றியவன் நேராக சென்னைக்கு வண்டியை ஓட்டிச் சென்றான்.

சென்னையென்றால் ஷ்ரவனை அசைக்க முடியாது, இங்கோ காவ்யாவின் அப்பா அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்றாலும் குண்டாயிசம் கையில் வைத்திருப்பவர்...

அதனால்தான் அஜயை சென்னைக்கு அழைத்து செல்கின்றான்... ஷ்ரவன் நேற்றிரவு அஜய் வருத்தப்படுவதை பார்த்தவன், அப்போதே ஸ்கெட்ச் போட்டு காவ்யாவைத் தூக்கிட்டான்.

சென்னை சென்றதும் அடுத்தநாள் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கும் ஏற்பாடு எல்லாம் தனது தந்தையின் செல்வாக்கை வைத்து முடித்துவிட்டான்.

ஆறுமணி நேரப் பயணம் முடிந்து வீடு வந்து சேர இரவாகிவிட்டது.

ஷ்ரவனின் வீட்டிற்குத்தான் வந்திருந்தனர்.

காவ்யாவின் தகப்பனார் கிரன் ஷெட்டி கோபத்தின் உச்சத்தில் மனைவியை அடித்திருந்தார், “உன்கிட்ட என்ன சொல்லிருந்தேன், யாரு வந்தாலும் காவ்யாவை வெளிய விடக்கூடதுனு சொல்லிருந்தேன், அறிவில்லையா உனக்கு. இப்போ பாரு தூக்கிட்டு போயிட்டான்.

இப்போ கல்யாணம் நின்னுப்போ

ச்சு... என் மானம் மரியாதை எல்லாம் போயிட்டு” என்று கத்தியவர்... இப்போது அவரது கோபம் ஹரிதாவின் மேல் திரும்பியது.

கிருஷ்ணா வீட்டிற்கு தன் ஆட்படையோடு வந்தவர் மிரட்டினார். “என் பொண்ணு இங்கவரணும் இல்லைனா உங்களை சும்மாவிடமாட்டேன், நீங்க ஹாஸ்பிட்டல் எப்படி நடத்தறீங்கனுப் பார்க்குறேன்” என்று.

சென்னையில் உள்ள சில ரௌடிகளிடம் பேரம் பேச... அதுவும் தேவானந்த் குடும்பம் என்றதும் ஜகாவாங்கினர், “அரசியல் பலமிக்கவர், பெரியபுள்ளி கைவைக்க முடியாது நீங்கவேணா உங்க ஏரியாவிலிருந்து ஆட்களை இறக்குங்க, அதுவும் ரிஸ்க்தான்” என்றார்கள்.

அடிபட்ட புலியாக உறுமினார்... “அரசியல் பலமிருந்தும் ஆட்பலமிருந்தும் ஒரு சின்னப்பையன் என் மானமரியாதையை இல்லாமா பண்ணிட்டானே” என்று குமுறினார். அதுவும் மகள், வேறு சமுதாயத்துப் பையனோடு ஓடிப்போய்விட்டாளே என்று வஞ்சம் வைத்துவிட்டார். அவரது அரசியல் வாழ்க்கையையிலும் மரியாதை போய்விட்டது என்று மனதில் தீராப்பகையை வளர்த்தார்

அடுத்தநாள் காலை வேலையிலயே எல்லாரும் தயாராகி ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு கிளம்பி சென்றனர்.

அஜய் ஏற்கனவே அந்தவீட்டிற்கு பழக்கமானவன்தான், சென்னையில் படிக்கும்போதிருந்தே... குடும்பம் முழுவதும் அஜயின் திருமணத்தில் சந்தோஷப்பட்டனர். எல்லோரும் இப்போது ரிஜிஸ்டர் ஆபிஸ்ல, சாட்சிக் கையெழுத்து ஷ்ரவனும், ஹரிதாவும்தான் போட்டனர். அதன் பின் அஜய்- காவ்யா இருவரும் மாலை மாற்றி தம்பதிகளாயினர்.

ஷ்ரவன் தங்களது அப்பார்ட்மெண்ட்லயே அவனுக்கென்று, காலியாக இருந்த ஒரு ஃப்ளாட்டை ஒரே நாளில் அஜயின் வீடாக மாற்றிவிட்டான்.

இப்போது அதில் ஒரு அறையில்தான் அஜய் காவ்யாவிற்காக காத்திருந்தான்.

அவனுக்கு இது கனவுப்போல இருந்தது, தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொணடிருந்தவனைப் பார்த்து உள்ளே வந்த காவ்யா கிளுக்கி சிரிக்கவும், நிமர்ந்துப் பார்த்தான்,தேவதைப்போல நின்றிருந்தாள்.

காவ்யாவை ரெடிபண்ணி அஜயின் அறைக்குள் விட்டுவிட்டு ஹரிதாவும் ஷ்ரவனும் கிளம்பிவிட்டனர்...

கீதாம்மாவை அவனோட அழைத்தும் அவரோ “இங்கயே இருக்கேன்” என்றுவிட்டார்... அவர் அஜயைவிட்டு இருந்திடமாட்டார்.

தங்களது அறையில் தனிமையில் இருந்தவர்கள் என்ன பேசுவதென்று தெரியாமல், அமைதியாக இருந்தனர்.

அஜயோ அவளது கன்னத்தை மெதுவாகப் பிடித்து... “உங்கப்பா ரொம்ப அடிச்சாங்களா? வலிக்குதா” என்று கேட்கவும் 

அவனது நெஞ்சிலயே சாய்ந்தவள் ஏங்கி ஏங்கி அழுதாள்... மெதுவாக அவளை சமாதானப்படுத்தினான்.

“அப்பா என்னோட கல்யாணத்துல ரொம்ப தீவிரமா இருந்தாங்க... இப்படி ஓடி வந்ததுல உங்களை எதுவும் செய்திடுவாங்களோனு ஒரு சின்ன பயமிருந்துச்சு... ஆனா இப்போ இவ்வளவு தூரத்துல பாதுகாப்பா இருக்கோம், ஷ்ரவன் அண்ணாவுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றவளின் மனதினை மாற்றுவதற்கு... “ஒய், பால் கொண்டுவந்ததான எங்க எனக்கு தா” என்றான்.

காவ்யா எழுந்து அங்கியிருந்த பாலை எடுத்து அவனுக்கு கொடுக்கவும், அதை வாங்காமல் அவளையே பார்த்திருந்தவன்,

“நம்ம இந்த வழக்கத்தை கொஞ்சம் மாத்துவோமா? முதல்ல நீ குடிச்சிட்டு தா, மீதியை நான் குடிக்குறேன்” என்று சொல்லி அவளைத் தன் அருகில் இருத்திக்கொண்டான்.

காவ்யா ஒரு வாய்தான் குடித்திருப்பாள்,அடுத்த நொடி காவ்யா திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள், அவளது ஒரு கையில் பால் சொம்பு இருக்க அதை கீழயும்போட முடியாமல் தவித்தாள்... அதுவொன்றுமில்லை அவளது வாயிலிருந்த பாலை அஜய் வாயோடு வாய் வைத்து உறிந்துக்கொண்டிருந்தான்.

ஒரு சொம்பு பாலையும் இப்படித்தான், காவ்யாவின் வாயிலிருந்தே குடித்திருந்தான், இறுதியாக “பால் செம டேஸ்ட் இல்ல... இதைதான் பெரியவங்க அந்தக்காலத்துலயே சொல்லா வச்சிருக்காங்கப்போல... முதல்ல பாலை குடிச்சிருங்கனு” என்று கண்ணடித்தான்.

அவளுக்கோ வெட்கம்மிக குனிந்துக்கொண்டாள்... அதுவே அஜய்க்கு போதையேற்ற, அவளை பிடித்து இழுத்து தனது மடியில் இருத்திதவன், அவளது தலையிலிருந்த மல்லிகைப்பூவின் வாசம்பிடித்தான்.

காவ்யாவின் பின்பக்கமிருந்து அவளது இடைக்குள் கைவிட்டவன், சேலையை உருவி எடுத்துவிட்டான்.

இதை எதிர்பார்க்காத காவ்யாவோ "ஐயோ", என்று அவனது மடியிலிருந்து கட்டிலில் சரிந்து விழுந்துவிட்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், அவள் மேலயே சரிந்தவன் “ஓய் டாக்டரு... பர்ஸ்ட் நைட்ல என்ன நடக்கும்னு தெரியாதா... இப்படி ஜெர்க்காகுற” என அவள் மேலயே சரிந்தவன்.

தன்னுடைய வேலைய ஆரம்பித்துவிட்டான்,காவ்யாவிடம் அவன் பேசியதைப் பார்த்தவள் " உங்களைப் பார்த்தா நீங்க இப்படிலாம் பேசுவீங்கனே தெரியலை... இப்போ இப்படி பேசறீங்க” என்று சிணுங்கியவளைப் பார்த்து, “காதலியா இருக்கும்போதுதான் கன்னியமா நடந்துக்கணும்... மனைவிக்கிட்ட எப்படிவேணா நடக்கலாம், பேசலாம்” என அவளது வயிற்றில் முத்தமிட்டவன்.

அப்படியே அவளை தன்னவளாகமாற்ற முயற்சிக்க, காவ்யோவோ அவனுக்குள் அடங்கினாள். காதல் கைகூடியதும் அவர்களின் மனசஞ்சலம் நீங்கியிருந்தது.

எல்லாம் முடித்து களைத்தவன் அவளை நெஞ்சில் போட்டுக்கொண்டு, தூங்க முயற்சிக்க, காவ்யா அவனது மீசையை இழுத்து "பார்க்கத்தான் ஐயா சாது, வேற எல்லாத்துலயும் முரடு" என்றவளை... “எதுலடி முரடு அதையும் சொல்லுடி” என்று செல்லங்கொஞ்சிக்கொண்டிருந்தான் விடியும்வரை நீண்டது அவர்களின் கொஞ்சல்கள்.

ஏற்கனவே ஷ்ரவன், அஜயின் வேலையை சென்னைக்கு மாற்ற, ட்ரான்ஸ்பர்க்கான அப்ளிகேஷனை தனது ஏற்பாட்டின் மூலம் அனுப்பிவிட்டான், அதனால் அஜய் ஒரு மாதம் லீவு எடுத்து இருந்தான்.

காவ்யாவும் அங்கேயுள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். அவர்களது வாழ்க்கை தெளிந்த நீரோட்டம் போல எந்தவிதமான இடையூறும் இன்றி நான்கு மாதம் சென்று விட்டது...

ஹரிதாவும் ஸ்ரவனும் சென்னையில் ஒரு வாரம் தங்கிருந்துவிட்டு பிரச்சினைகள் சிறிது அடங்கியதும் பெங்களூருக்கு திரும்பிச் சென்றனர்.

ஹரிதாவின் வீட்டிற்கு சென்ற ஷ்ரவன் கிருஷ்ணா- சுமித்ராவிடம் பேசி ஹரிதாவை தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்தான்.

இரண்டு மாத பிரிவு இடைவெளி அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை கொண்டு வந்திருந்தது வழக்கம் போல சிறு சிறு சண்டைகள் போட்டாலும் இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் இருந்தது.

இப்போது ஹரிதாவிற்கோ ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது அதனால் கிருஷ்ணா

அத்தியாயாம்-20

 “இரு வீட்டாரின் பெரியவர்களும் ஏழாவது மாதத்தின் இறுதியில் வளைகாப்பு வைக்கலாம்” என்று பேசி முடிவு செய்து ஷ்ரவனிடம் கூறினார்கள்.

 “மிகவும் அழுத்தமாக சொல்லிவிட்டான் ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு வைத்து கூட்டிட்டு போகட்டும்... உடனே பாப்பா பிறந்து ஒரு மாத்த்தில் நமது திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவோம்...

எங்களை இண்டு மாதம் இன்னும் ஒன்ன இருக்க விடுங்களேன் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டான். இந்த ஒரு விஷயத்திலாவது நான் சொல்றத கேளுங்க என்று தனது அம்மாவிடம் கெஞ்சினான்.

அவரும் வேறு வழியின்றி கிருஷ்ணாவிடம் கலந்து ஆலோசித்து ஒன்பதாவது மாதத்தின் இறுதியில் வளைகாப்பு சென்னையில் வைத்து நடத்துவதற்காக கலந்தாலோசித்து முடிவெடுத்துவிட்டனர்.

வளைகாப்பு சென்னையில் வைத்து என்பதால் ஷ்ரவன் ஹரிதாவை அழைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் முன்பே சென்னைக்கு வந்துவிட்டான்.

வளைகாப்பு நடப்பதற்கு முந்தின தினம் இரவு வேளையில் கட்டிலில் சாய்ந்து தன் கால்களுக்கு இடையே மனைவியை இருத்திக்கொண்டு அவளது வயிற்றின் மேல் கையை வைத்து தடவி கொடுத்தவன் பிள்ளையின் அசைவை கண்டு உணர்ந்து இருவருமே சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்து இருந்தனர்.

 ஷ்ரவன் மெதுவாக ஹரிதாவின் தோள்களில் தன் தாடியை வைத்து தேய்த்தான்... “ரிது பேபி மேகா அக்கா வீட்டிற்கு போகும் போது சில விஷயங்கள் உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்... நடந்த பிரச்சனைகளில் எல்லாமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன். இப்போ அத சொல்லணும் போல இருக்கு” என்று சொல்லவும் ஹரிதா எழுந்து போனை எடுத்து அதில் வீடியோ மோட் ஆன் செய்து கட்டிலில் முன்பக்கம் வைத்துவிட்டாள் இவர்கள் என்ன பேசினாலும் ரெக்கார்ட் ஆகின்றமாதிரி.

மறுபடியும் வந்து ஷ்ரவனின் காலுக்கிடையில் உட்கார... அப்படியே அவளை பின்பக்கமாக கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தான் “ரிது பேபி நான் பீஜி படிப்பதற்காக அமெரிக்கா முதல்ல போனபோது மேகா அக்கா வீட்டுலதான் இருந்தேன்.

அப்பதான் மியாவ அங்க பார்த்தேன் பார்த்ததும் பிரெண்டா தான் பேசுனோம் பழகினோம். ஆனா எங்களுக்கு திருமணம் பண்ணி வைக்க இதற்காக மேகா அம்மாவிடம் பேசி இருந்தது எனக்குத் தெரியாது.

ஆனால் மீயாவுக்கு தெரிந்திருக்கிறது. வீட்டின் வசதி நிலை எங்க வீட்டைவிட கம்மி தான் என்றாலும் ஆத்விக் அத்தானிற்காகத்தான் அப்பா அவருக்கு பொண்ணைக் கொடுத்தது. மியா அழகிதான் என்றாலும் எனக்கு அவள்மேல் எந்தவிதமான ஈடுபாடும் வரவில்லை. எனக்கு அவள் நல்ல தோழியாக தான் இருந்தாள்... ஆனால் படிப்பை முடிச்சுட்டு அங்க வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது தான் அவளிடம் நிறைய மாற்றங்கள்

எப்பொழுதும் என்னை ஒட்டி உரசிக்கொண்டு உட்கார்ந்தது, பார்வையில் நடத்தையில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்ததும் நான் அவளிடம் இருந்து சிறிது ஒதுங்க ஆரம்பித்தேன். அவளிற்கு வெளியே நிறைய ஆண் நண்பர்களின் தொடர்புகள் உண்டு என்று எனக்கு பின்புதான் தெரிய வந்தது.

ஒருநாள் என் படுக்கைக்கு அரைகுறை ஆடையுடன் வந்தவள் மேலாடையை கழற்றிவிட்டு என்னுடன் ஒட்டி படுக்க வந்தாள், நான் சட்டென்று எழும்பி தனியே வந்தவன் அவளை எச்சரித்து அனுப்பி விட்டு மேகா கிட்ட சொல்லிட்டேன்.அதற்குப் பிறகு நான் அங்க இருக்கவில்லை வெளியே அறை எடுத்துத் தங்கி இருந்தேன்

ஒரு நாள் திடீரென்று உதவி என்று வந்து நின்றாள் மருத்துவமனைக்கு என்கூட வாங்க என்று. அப்போதுதான் அக்காவும் ஊருக்கு போயிருந்தா. ஹாஸ்பிட்டலுக்கு போனதுக்கு அப்பறம்தான் தெரியும்.அவள் அபார்சன் பண்றதுக்காக என்ன கூட கூட்டிட்டு போயிருக்கா... சத்தியமா ரிது பேபி நான் இத அவகிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை விட்டேன் பாரு ஒரு அறை. உடனே நிரூபேபிக்கு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்...

அம்மாவும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாங்க அதனால்தான் மேகா அக்கா எப்பவுமே என்கிட்ட சரியா பேச மாட்டாங்க.

அதன்பிறக தான் எல்லாருக்கும் தெரிந்து, அவளை தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தாங்க அத்தான். அதனால்தான் இப்போது கொஞ்சம் அடங்கி இருக்கா. அவங்க அம்மா அப்பா எல்லாம் அவ இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க.

சாரிடா இதெல்லாம் முதலில் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும் நமக்குள்ள சண்டை பிரச்சினைகள் எதுவுமே வந்திருக்காது, சரி விடு எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கும்” என்று சொன்னவன் “என் மேலதான் தப்பு உன்னை கூட்டிட்டு போகும் போதே நான் மியா விஷயத்தை உன்கிட்ட சொல்லிருந்திருக்கணும்... என்னோட மனைவிகிட்ட நான் சொல்லாம விட்டது தப்புதான்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு மன்னிப்பு கேட்டான்.

எதுவுமே சொல்லாமல் அப்படியே அவனது நெஞ்சோடு பின்பக்கமாக சாய்ந்து, அவன் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைத்து கொண்டாள்... அப்படியே பின்பக்கமாக கழுத்தை வளைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நானும் தப்பு பண்ணி இருக்கேன் அத்தான் எவ என்ன சொன்னாலும் நான் என்னோட ஷ்ரவனை நம்பி இருக்கணும் இல்ல. அந்த நம்பிக்கை இல்லாமல் தானே நான் உங்களை அதிகமாக பேசினேன்... நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்” என்று இருவரின் மன்னிப்பு படலம் முடிந்ததும் தனது மொபைலை எடுத்து வீடியோ ஆஃப் செய்தாள்.

தூங்குவதற்கு அப்படியே ஒருக்களித்துப் படுக்கவும் பின்பக்கமாக இருந்து அவன் அவளது முகத்தை மட்டும் திருப்பி அப்படியே அவளது இதழ்களை தனது முரட்டு உதடுகளால் பற்றியவன்... அவனது காதலை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்... மெது மெதுவாக சுவைத்து, முத்தத்தின் சுவையையும் ,அவளது இதழின் சுவையையும் ஒன்றாக சுவைத்துக் கொண்டிருந்தான்

அவளது இதழ்களை விட்டு,அவளது கன்னங்களின் நெற்றியில் என்று மாறி மாறி முத்தமிட்டவன். “ரிது பேபி ஐ அம் கோயிங் டு மிஸ் யூ டி” என்று புலம்பினான் தான் மெதுவாக அப்படியே கீழிறங்கி நிறைமாதமாக இருப்பதால் மேடிட்டுத் தெரிந்த வயிற்றின் மேலே முத்தமிட்டான். அதை பார்த்துக்கொண்டிருந்த ஹரிதாவும் அவனது கையை பற்றி மேலே வர சொன்னவள் அவனது மீசையைப் பிடித்து இழுக்க இருவரின் கண்களும் காதலினால் நிறைந்திருந்தது .

அவளுக்கு மீசை பிடிக்கும் என்பதால் இப்போது மீசை வைத்திருந்தான் பெரிதாக. அவன் முத்தமிடும் பொழுதெல்லாம் அந்த மீசையும் சேர்த்து அவளை கூசி சிலிர்க்க வைக்க சந்தோஷப்பட்டுக் கொள்வாள்.

“என்ன மாமனுக்கு லேசா வேறெதோ ஆசை வந்துட்டு போல இருக்கு” என்று ராகத்தோடு கேட்க, அவளின் மூக்கை பிடித்து திருகியவன் . “எப்படித்தான் ரிது பேபி என்ன கண்டுபிடிக்கறானே தெரியலை” என்று அவனும் வார்த்தைகளில் ராகம் பாடினான்.

 "ரிது பேபி"

 "என்ன"

 "ரிது பேபி"

 "என்ன"

 "ரிது பேபி"

 "என்னடா"

 “ஓய் என்ன டக்குனு டா போட்டுக் கூப்பிடுற... பிச்சிருவேண்டி...” என்று கோபப்படுறேன்ற பேருல... கொஞ்சிக்கொண்டிருந்தான்.

 அவர்களின் கொஞ்சல்கள் மிஞ்சல்களாகி தூங்கிவிட்டனர்.

விடியலில் எழும்பிய ஹரிதா தங்களது திருமணச்சேலையைக் கட்டிக்கொண்டு தயாரானாள்... திருமணத்தன்று கட்டியப்பொழுது இருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் மனநிலையும் நேரெதிர்...

அங்கு அஜயின் வீட்டிலயோ மகப்பேறு மருத்துவர் காவ்யாவ பேறுகாலத்திற்கு தயாராகிவிட்டாள்... இப்பொழுது மூன்றாம் மாதம்...

அவளுக்கு தாயின் நியாபகம் வரும்பொழுதெல்லாம் மடிதாங்குவார் கீதாம்மா. தன்னால் பெற்றெடுக்க முடியவில்லை என்றதும் அஜய்க்கு வாழ்வளித்தவர்... தனது பேரப்பிள்ளை வரப்போகுது என்றதும் மருமகளை மகளாகத் தாங்கினார்.

காவ்யாவின் விழாவிற்கு அவளால் வரயிலவில்லை என்று அஜயிடம் முகம்திருப்பி நின்றாள். அஜய் அவளிடம் சமாதானம் பேசிக்கொண்டிருந்தான். சிலபல முத்தங்களை கொடுத்தும் பெற்றும் சமாதனப்படுத்தியிருந்தான்.

பெரிய மஹாலில் வைத்து விழாவை நடத்தினர். தேவானந்த்- நிருபமா குடும்பவிழா அல்லவா! எப்படியிருக்கும்...

பட்டுவேட்டி பட்டுசட்டையில் மீசை வைத்து அப்படியே பெரிய மனிதன் தோரனையில் இருந்தான் ஷ்ரவன், அவனின் அருகில் வாடாபுன்னகையில் ஹரிதா... மணவாழ்கையின் பூரிப்பும், தாய்மையின் செழிப்பும் அவளது கண்களில் தெரிந்தது.

ஒவ்வொருத்தராக வளையல் அடுக்க... இருந்து இருந்து களைத்துப்போனாள் ஹரிதா... வயிறு வேறு பெரிதாக இருக்க முதுகுவலியே வந்துவிட்டது...

அத்தனைப்பேர் இருக்கும் இடத்திலும் தனது மனையாளின் முதுகைத் தடவிவிட்டான்... “வலிக்குதா பேபி” என்று.

ரொம்ப நேரம் அமர்ந்திருப்பதால் அவளது காலையும் கவனித்துக்கொண்டான் நீர் போட்டிருக்கா, வீங்கியிருக்க என்று...

 இதைப் பார்த்துக்கொண்டிருந்த நிருபமா

"அடேய் நல்லவனே... போதும்டா" என்று மகனை பரிகாசம் செய்யவும்,

"நிருபேபி வொய் பொங்கிங்க்... நோ மாமியார் சேட்டை" என்று அவரையும் கலாய்த்தான்.

“ அவரது அருகில் வந்து நிருபேபிக்கு கால் வலிச்சாலும் ஷ்ரவன் தடவிவிடுவான்...” என்று அன்னையின் கன்னத்தில் முத்தம் வைத்தவன்... “தேங்க்ஸ்” என்றான். அவருக்குமே தெரியும் எதற்கு என்று...ஆனாலும் " எதுக்கு இந்த ஐஸ்ஸு... சொத்துல பங்குலாம் கிடையாது... எல்லாம் என் பேரப்பிள்ளைங்களுக்குத்தான்” என்று வேண்டுமென்றே பேச்சை திசை திருப்பினார்.

என்னதான் இருந்தாலும் தன் பிள்ளையின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கமல் சமாளித்தார்.

அஜய் வந்ததும் அவனிடமும் வம்பு வளர்த்தான் ஷ்ரவன் " வாடா... தீயா வேலை செய்ற போல.... சிஸ்டர் அடுத்த வளைகாப்பிற்கு ரெடியாகிட்டாங்க போல” என்று

அஜயோ " உன்னோட நண்பன்ல உன்னைமாதிரி வேலை செய்யமுடியலை.... இப்படியாவது செய்றேன்டா" என்று அவனை சீண்ட... ஷ்ரவன் இப்போது வாயை மூடிக்கொண்டான்.

வளைகாப்பு முடிந்து மதியத்திற்குமேல் கிளம்புவதாக இருக்க... ஷ்ரவனிடம் ஒன்றியவள் அவனருகிலயே இருந்து, போக மனசில்லாமல் இருக்க... அவளது கண்ணைப்பார்த்து " என்னடா " என அவளது கண்களைப்பார்த்துக் கேட்க...

“ஷ்ரவன் மனசுக்குள்ள அமெரிக்காவுல இருக்கும்போது ஒரு பேட் வைப்ரேஷன் இருந்துச்சுதான... அதே மாதிரி இப்பவும் தோணுது, பயமாயிருக்கு” என ஹரிதா சொல்லவும், அவளை தனது நெஞ்சோடு சேர்த்தணைத்தவனின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது...

பிரசவம் பெண்ணுக்கு சுலபமல்ல என்று அவனுக்குமே தெரியும் அதனால் மனசு பிசைந்தது அவனுக்கு... இருந்தாலும் அவளை சமாதானப்படுத்தினான்.

பெங்களூருக்கு செல்ல எல்லாம் ரெடியாகவைத்து வேனில் வந்த சொந்தங்கள் சென்றுவிட... இங்கு வீட்டிலிருந்த காரில் ஹரிதா, கிருஷ்ணா சுமித்ரா மூவரும் கிளம்ப அவர்கள் வீட்டின் ட்ரைவரே வண்டி ஓட்ட... கடைசி நேரத்தில், ஷ்ரவன் “நிருபேபி நானும் அவங்ககூடவே கிளம்புறேன்...” என்று ஏறிக்கொண்டான்.

கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் முடிந்து பெங்களூர் அருகே நெருங்கும் பொழுது சென்னை பெங்களூர் ஹைவேயில்,

இவர்கள் காரை பின்தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மூன்று கார்கள் வந்து கொண்டிருந்ததை டிரைவர் கவனித்து ஷ்வனிடம் மெதுவாக கூறினான்.

முன்பக்கம் கிருஷ்ணா இருக்க பின்பக்கம் இவர்கள் 3 பேரும் இருந்தனர் டிரைவர் கூறியதும் ஷ்ரவன் காரை ஓரமாக நிறுத்தச் சொன்னான்.

காரை நிறுத்தியதும் ரோட்டின் ஓரமாக கிருஷ்ணாவும் சுமித்ராவும் இறங்கியிருக்க

ஷ்ரவன் “ரிது பேபி இறங்க முடிஞ்சா இறங்குமா” என்றவன் பக்கவாட்டில் திரும்பி பார்த்துக்கொண்டே, அவள் இறங்க முற்படவும், பார்த்தவன் ஒரு கார் வேகமாக வருவதை கண்டு “ரிது பேபி இறங்கு” என்று அவளைத் லேசாக வெளியே தள்ளவும்... டிரைவரும் சுதாரித்துக் கரியிலிருந்து சாடிவிட்டான். அதற்குள் ஷ்ரவனோடு சேர்த்து பின்னாடி வந்த அந்த பெரிய கார் அடித்து தூக்கியிருந்தது....

லேசாக தள்ளியதால் ஹரிதா பக்கவாட்டில் சரியவும், ஷ்ரவன் இரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழவும் சரியாக இருந்தது...

கிருஷ்ணா அதிர்ச்சியில் மருமகனிடம் ஓட சுமித்ராவோ மகளை தூக்க முயற்சிக்க, அவள் மயக்க நிலையில்...

அடுத்த ஒரு மணி நேரத்தில் பெங்களூரில் ஹைவேசில் இருக்கும் பிரபலமான ஹாஸ்பிடல் இருவரும் தீவிரமான சிகிச்சை பிரிவில் இருந்தனர்.

ஷ்ரவனின் நிலையை டாக்டர்கள் ஒன்றும் சொல்ல இயலாது என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டனர்.

ஹரிதாவின் நிலையோ பிள்ளையை உடனே வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலையில்...

நிருபமா அழைத்து பேசி வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

அத்தியாயம்-21

ஹரிதாவிற்கு உடனடியாக ஆப்பரேஷன் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலையில் இருந்ததால், கிருஷ்ணா கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்... அவளுக்கு ஒருபக்கம் ஆப்பரேஷன் நடக்க, ஷ்ரவனுக்கு சிகிச்சை ஒருபக்கம் நடந்துக்கொண்டிருந்தது...

ஒருமணிநேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து இரண்டு நிமிடம்கூட இல்லாது கிருஷ்ணாவிடமும் சுமித்ராவிடமும் “உங்க பொண்ணுக்கு பெண்குழந்தைப் பிறந்திருக்கு” என குழந்தையை காண்பித்துவிட்டு... இன்குபேட்டரில் வைக்க எடுத்து சென்றுவிட்டாள்....

ஆசை ஆசையாக எதிர்பார்த்த குழந்தை வந்தாயிற்று... ஆனால் அதை எதிர்பார்த்த இருவரும் தன்னிலை அறியாது இருந்தனர்...

ஷ்ரவனின் குடும்பம் வருவதற்கு நள்ளிரவு ஆகிற்று... அவனின் உடம்பில் பட்ட எல்லா காயங்களுக்கும் மருத்துவம் முடிந்தது... ஆனால் தூக்கி எறிந்ததில் தலையில் பட்ட அடியினால் காயம் எதுவுமில்லை ஆனால் அந்த அடியினால் மூளையில் ஏற்பட்ட அதிக அதிர்வினால் மூளை இன்னும் விழிப்படையவில்லை...

அதனால் கோமா நிலையில் மட்டுமே இருந்தான், மூளைச்சாவுமில்ல... நினைவு வந்தால் வரும், வரமாலும் போகும்.

இதைக்கேட்டு மொத்தமாக எல்லாரும் உடைந்துப்போயினர்... நிருபமா அப்படியே உறைந்து அங்கயே அமர்ந்துவிட்டார்.

பெரிய அடி ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும்... காலையில் மாலையும் கழுத்துமாக சந்தோஷமாக விழாவில் இருந்த இருவர்... இப்போதோ பேச்சு மூச்சற்ற நிலையில்... புதுவரவான சிறு உறவோ தனியறையில்.

கண்ணீர் வற்றிப்போகுமளவிற்கு அழுது தீர்த்துவிட்டனர்...

ட்ரைவர் வந்து எல்லா விசயத்தையும் சொல்லவும், தேவானந்த் நிருபமா இருவரும் பேச்சற்ற நிலையில்

அக்க்ஷராவின் கணவன் ஸ்ரீராம்தான் எல்லாவற்றையும் கையிலெடுத்திருந்தான்...

உடனே சென்னைப் போலிஸ்க்கு தகவல் சொல்லி அங்கயிருந்து பெங்களூரு போலிஸிற்கு ப்ரஷர் கொடுத்து விசாரனை முடுக்கிவிட்டனர்.

ட்ரைவர் பின்னாடி தொடர்ந்து வந்து மூன்று வண்டிகளில் இரு வண்டியின் நம்பர்களை குறித்திருந்தான்... இப்போது அதை ஸ்ரீராமிடம் கொடுத்தான். மீதி வேலைகளை அவர்களது பணம் தானாகப் பார்த்துக்கொண்டது.

மூன்றவது நாளிலயே ஹரிதா கண்விழித்துவிட்டாள்... முதலில் தொட்டுப்பார்த்தது தனது வயிற்றைத்தான்... வெற்று வயிறு என்றதும், லேசாக முணங்கினால் அந்த சத்தத்திலயே அறையிலிருந்த சுமித்ரா மகளிடம் ஓடிவந்து அவளது கைகளை பிடித்துக்கொண்டு " என்னம்மா" தனது வயிற்றை தொட்டுக்காட்டி பிள்ளையை எங்க என்று சிறிது நடுக்கத்துடனும் கண்களில் தவிப்புடனும் சைகையில் கேட்க... சுமித்ரா " பாப்பா பிறந்திருக்காடா, இன்குபேட்டர்ல இருக்காடா...சீக்கிரமா பிறந்துட்டாதான அதனால” என்றவர்...அவளது அருகிலயே இருந்துக்கொண்டார்... “ஷ்ரவன் எங்க” எனக் கேட்டவளிடம் "இப்போதான் உன்னை பார்த்துட்டுப் போனாங்க நாளைக்கு வருவாங்க” என்று சொல்லவும்.

ஷ்ரவனுக்கு விபத்து நடந்தபோது, அவள் பார்க்கும் முன்பே மயங்கியிருந்ததினால் என்ன நடந்தது என்று தெரியவில்லை, எந்த மருத்துவமனையிலிருக்கிறோம் என்றும்கூட... அவளால் ஓரளவிற்குமேல் பேசவும் முடியவில்லை, கண்விழித்திருக்கவும் முடியவில்லை.

கிட்டதட்ட ஒருவாரம் கழித்துதான் தாயும் சேயும் ஒன்றாக ஒரே அறைக்கு மாற்றியிருந்தனர்... இன்னும் ஒரு மூன்று நாள் இருக்கவேண்டும் என்றிருந்தனர் மருத்துவர்கள்.

அதற்குள் விசாரனை முடுக்கிவிடப்பட்டு செய்தது யார் என்றும் தெரிந்துவிட்டது...

காவ்யாவின் அப்பா கிரண் ஷெட்டிதான்...

காவ்யா ஓடிப்போன நேரத்தில் செய்தால் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று, இவ்வளவு நாள் காத்திருந்து சென்னையில் வைத்தே தூக்க சொல்லியிருந்தார்...

ஆனால் அது முடியாமல் போகவே... ஹைவேஸில் வைத்து செய்துவிட்டனர்.

யாரென்று தெரிந்ததும் தேவானந்த் போலிஸை கேஸை முடிக்கச்சொல்லு, மீதியை நான் பார்த்துக்குறேன் என்று தகவல் சொல்லிவிட்டார்.

ஸ்ரீராம் யோசித்தவன் " மாமா அதுவந்து போலிசே எல்லாம் பார்த்துக்கட்டுமே... நம்ம இப்போ அமைதியாக இருப்போம்” என்றதும் அவனை ஏறிட்டுப்பார்த்து "ஆசை ஆசையா பெத்து வளர்த்து என் வாரிசு... உயிருக்கு போராடிட்டு இருக்கான், சும்மா இருக்க சொல்றீங்களா மாப்பிள்ளை, அவன் அப்படி படுத்துருக்கது உங்களால பார்க்க முடியுதா... உங்களாலயே தாங்க முடியலையே, என்னால எப்படி முடியும். இந்த விசயத்தை நான் பார்த்துக்குறேன் நீங்க தலையிடவேண்டாம்” என்று பேச்சை முடித்துவிட்டார்.

பத்து நாள் கழித்து ஹரிதாவையும், குழந்தையையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர்.

ஹரிதா கேட்டாள் "அம்மா நம்ம வீட்டுக்குப் போகலையா... அன்னைக்கு என்ன நடந்துச்சு... ஷ்ரவன்தான் என்னை அவசரமா வெளியே தள்ளிவிட்டாங்க... ஏன்.

அவங்களை நான் பார்க்கவேயில்லை என்னாச்சு” என்று கேட்டாள் “என்னொட போன் தாங்க அவங்களுக்கு போன் பண்றேன்” என்கவும்... நிருபமா பேத்தியை கையில் வாங்கிக்கொண்டு கதறி அழுதார்.

அவர் அழுகையே சொல்லியது ஷ்ரவனுக்கு ஏதோ என்று... அவளது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு “இல்லைம்மா அவனுக்கு சின்னதா அடிபட்டிருக்கு ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” என்று அக்க்ஷரா வந்து நிருபமாவின் தோளில் கைவைத்து அழுத்த... அவர் சுதாரித்து அழுகையை நிறுத்தியவர்... ஹரிதாவினை “நீ ஓய்வெடுமா” என்று அவளது அறையிலிருந்து வெளியேறினார்.

சுமித்ரா இருந்து ஹரிதாவைக் கவனித்துக்கொண்டார்... ஒருமாதமாகிவிட்டது... தாயும் சேயும் கொஞ்சம் தேறிவந்திருந்தனர்.

ஷ்ரவனின் நியாபகம் வர தனது “போன் எங்க” என்று தாயிடம் கேட்டாள். அவரும் நடந்த கலவரத்தில் அதை தனது பேக்கில் வைத்திருந்தார் எடுத்து கொடுத்ததும்... தனது கணவனும் தானும் வளைகாப்பின் முந்தினநாள் பேசின வீடியோவை போட்டுப்பார்த்திருந்தாள்.

பிள்ளையை நிருபமா வைத்திருக்கவும்... மெதுவாக வெளியே வந்தவளின் காதில் விழுந்த செய்தியைக் கேட்டதில் அப்படியே விழுந்துவிட்டாள்... அவள் விழுந்த சத்தத்தில் எல்லாரும் திரும்பிபார்க்க.

ஐயோ என்று ஓடிவந்து தூக்கி படுக்கவைத்து, டாக்டரை வரவைத்திருந்தனர்... அவள் எழும்பியதும் கேட்ட முதல் கேள்வி “ஷ்ரவன் எங்க எனக்கு இப்போவே தெரியனும்... எல்லாரும் சேர்ந்து என்கிட்ட எதையோ மறைக்கறீங்க...

அத்தை பேசினதக் கேட்டேன். ஹாஸ்பிட்டல்ல இருந்து யாரை மாத்தப்போறீங்க என்று நேரடியாகவே கேட்டாள்...” இதற்குமேல் மறைக்கமுடியாது எனத் தெரிந்து... ஷ்ரவனுக்கு ஏற்பட்ட விபத்தும், அவனின் தற்போதைய நிலை என எல்லாவற்றையும் கூறிவிட்டனர்.

ஹரிதாவை வீட்டிற்கு அழைத்து வரும்போதே ஷ்ரவனை சென்னை மருத்துவமனைக்கு மாற்றியிருந்தனர்... “ஒரு மாதமாகிவிட்டதால் இனி ஐ.சி.யூவில் இருக்கவேண்டாம்... ஒரு அறைக்கு மாற்றி நர்ஸ் ஒருத்தரை வைத்தல் போதும்” என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

அதுவிசயமாக பேசும்போதுதான் ஹரிதா கேட்டு மயங்கி விழுந்திருந்தாள்... உண்மை தெரிந்ததும் அவளால் அந்த செய்தியை மனதாற்கூட ஏற்கமுடியவில்லை .

கடைசி நேரத்திலும் தள்ளிவிட்டு எனக்கும் பாப்பாவுக்கும் ஒன்னுமாகப் பாதுகாத்திருக்காங்களே... என்று நினைத்து நினைத்து மருகி அழுதே கரைந்தாள்.

உடனே கிளம்பி ஸ்ரவனை இப்பவே பார்க்கணும் என்று பிடிவாதம் பிடித்து அமர்ந்திருந்தாள்... வேறுவழியின்றி ஸ்ரீராம்தான் தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு ஷ்ரவனை பார்த்தவளுக்கு தனது உயிரை யாரோ பிடுங்கி எடுத்துக் கொண்டு போனது போன்ற உணர்வு... அப்படியே அவனது கட்டிலின் அருகில் கீழே மடங்கி அமர்ந்தவள்தான் எவ்வளவு நேரம் என்று தெரியாது அமர்ந்திருந்தாள்.

அதற்குள்ளா நிருபமாவும் வந்து ஹரிதாவின் தோளில் தட்ட... தன்னுணர்வின்றி அவரை ஏறிட்டுப் பார்த்தவள்... மறுபடியும் திரும்பி ஷ்ரவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

இப்படி இருந்தா இவளுக்கும் எதுவுமாகிடும் என்று அவளை விடாப்பிடியாகத் தூக்கி காரில் போட்டு வீட்டுக்கு கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்றிகிவிட்டாது...

வீட்டிற்கு வந்து தனது மகளைப் பார்த்தபின்தான் ஓரளவு தெளிந்தவள்... மகளை மடியில் வைத்துக்கொண்டு அவர்கள் காதலித்த நாட்களிலிருந்து வாளைகாப்பு வரைக்குமான எல்லா போட்டோக்களையும் திரும்ப திரும்ப பைத்தியக்கரி மாதிரி பார்த்திட்டிருந்தாள்... கடைசியாக இருவரும் பேசிய வீடியோவை பார்த்திருந்தவள்... தானாகவே தேம்பி தேம்பி அழுதவள்... தன்னைத்தானே தேற்றி கொண்டு ஒரு முடிவிற்கு வந்தவள்.

மகளுக்கு பால் கொடுத்து தூங்க வைத்தவள், எல்லாருக்கும் முன்பாக வந்து நின்று “ஏன் இவ்ளோ நாள் என்கிட்ட இத மறைச்சிட்டீங்க” எனக்கேட்டு சண்டைப் போட்டவள், “நாளையில் இருந்து நான் தினமும் ஹாஸ்பிட்டல் போவேன், ஷ்ரவன்கூடதான் இருப்பேன்” என்றவள்.

தனதறைக்குள் வந்து கட்டிலில் கவிழ்ந்து விழுந்து அழுதாள்.

அஜய் வீட்டிலோ ஷ்ரவன் அடிப்பட்ட நாளில் இருந்தே அவன் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தான். என்னால்தான் ஷ்ரவனுக்கு இப்படி ஆகி விட்டதே என்று காவ்யாவிடம் செல்ல முடியவில்லை, அவளது உடல் நிலையும் ஒரு காரணம்.

அதைவிட வேறு ஒரு காரணமும் இருந்தது, ஷ்ரவன் அடிபட்டு விழுந்த அடுத்த பதினைந்தாவது நாளில் பெங்களூரில் நடந்த ஒரு விபத்தில், காவ்யாவின் தந்தை கிரண் ஷெட்டியும்,காவ்யாவை கல்யாணம் பண்ணுவதற்கு ரெடியாக இருந்த மாப்பிள்ளையும் மிகக் கொடூரமான முறையில் இறந்துவிட்டனர் விபத்து நடந்த இடத்திலேயே, அது செய்திகளிலும் வந்திருந்தது...

அஜய்க்கு தெரியும் விபத்திற்கு காரணம் என்ன என்று. ஷ்ரவனின் தந்தையைப்பற்றி கிரண் ஷெட்டிக்கு தெரியவில்லை, ஆனால் அஜய்க்கு நன்றாகத்தெரியுமே.... ஏனென்றால் காவ்யாவின் தந்தை ஷ்ரவனுக்கு செய்தது மிகவும் கொடூரம், அது அவருக்கே திரும்ப கிடைத்துவிட்டது அதனால் காவ்யாவிடம் எல்லாம் மறைத்திருந்தான்.

அடுத்த நாள் காலை எழுந்த ஹரிதா ஷ்ரவனுக்கு பிடித்த மாதிரி அழகாக சேலை கட்டி பூ வைத்து தயாரானவள், தனது மகளுக்கு பசியாற்றி நிருபமாவிடம் கொண்டு கொடுத்தவள், சுமித்ராவை அழைத்து “நீங்க பெங்களூருக்கு போங்க அங்க அப்பா தனியா இருப்பாங்க. நான் இங்கு இருந்துப்பேன் எனக்கு யாரும் துணைக்கு வேண்டாம்” என்று அவரிடம் சொன்னவள், ட்ரவரை அழைத்து “என்ன ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போங்க” என்று காரில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் பயம்... இவளுக்கு மனப்பிறழ்வாகிட்டோ என்று.

அதனால் பின்னாடியே ஸ்ரீராம் காரை எடுத்துக்கொண்டு சென்றவன் அங்க பார்த்ததும்... அவனை அறியாமலயே கண்ணீர் வழிந்தோடியது.

ஹரிதா மருத்துவமனைக்கு சென்றவள் ஷ்ரவனின் கையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டாள்.

அவனது கைகளை வருடிக்கொண்டே" சாரி ஷ்ரவன்... உங்களை பார்க்கவர ஒரு மாசமாகிட்டு, யாருமே என்கிட்ட சொல்லலை... இப்போதான் நான் வந்துட்டேன் உங்க பக்கத்துலயே, இனி உங்களுக்கு எல்லாம் சரியாகப்போகும்” என்று எதோ அவனிடம் நேரடியாக பேசுவதுப்பேல பேசிக்கொண்டிருந்தாள்.

ஷ்ரவனின் நிலை மூக்கிலும் தொண்டையிலும், உணவுக்காக குழாய்கள் போடப்பட்டு... பரிதாபநிலையில். ஓடுகின்றவரையில் ஓடட்டும் என்று மருத்துவர்களும் கைவிட்டு பேருக்குத்தான் மருத்துவமனையில் இருக்கின்றான் என்றும், இருக்கும் குழாய்கள் எல்லாம் எடுத்துவிட்டால், ஷ்ரவனின் நிலை உணர்வற்ற ஒருவனாகிவிடுவான் என்று எல்லாருக்கும் தெரியும்... ஆனாலும் ஒரு தாயாக நிருபமா கடவுளையும் விதியையும் நம்பிக்கொண்டிருக்க...

அவனின் மனையாளோ அவர்களின் அன்பையும் காதலையும் நம்பி அவனருகில் பேசிக்கொண்டிருந்தாள்...

அஜயின் வீட்டில் காவ்யா எதற்கோ அஜயின் கப்போர்டை திறந்தவள் கொஞ்சம் நியூஸ் பேப்பர் கீழே விழவும், எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அதில் ஷ்ரவனின் விபத்துக்குறித்தும் தேவானந்த் மகன் என்றும் தலைப்பு செய்தியாக இருந்தது... காவ்யாவிற்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியும் என்று அஜய்க்குத் தெரியாது, பேசமட்டும் செய்வாள் என்று நினைத்துதான் அதை அங்கு வைத்திருந்தான்.

உடனே அஜய்க்கு அழைத்து அவசரமாக வரச் சொன்னவள், கீதாம்மாவிடமும் ஒன்றும் பேசாமல் தனதறையில் அமர்ந்து எதுக்கு என்கிட்டயிருந்து மறைக்கணும் எனதான் யோசித்திருந்தாள்... அவளின் தந்தையின் நியாபகம் வரவேயில்லை...

அஜய் பயந்து என்னவோ? எதுவோ? என்று பயந்து ஓடிவந்திருந்துதான்.

அஜய் உள்ளே வந்ததும் அவனின் முன்பு அந்த பேப்பரை எடுத்து போட்டவள், அவனது பதிலுக்காக முகத்தை ஏறிட்டுப்பார்க்க...

இதற்குமேல் மறைத்து பிரயோஜனமில்லை என நினைத்தவன் எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டான்.

கேட்டவளுக்கோ தன் தந்தை இவ்வளவு கொடுரமானவரா என்று அதிர்ந்தவள். ‘அவரின் கொடூர மரணம் அவருக்கான சரியான தண்டனை’ என நினைத்தவள்.

அஜயிடம் "என்னை இப்பவே ஷ்ரவன் அண்ணா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க" என பிடிவாதம் பிடித்து அங்கு வந்திருந்தாள்.

நிருபமாவைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டவள் " மன்னிச்சிருங்க, எங்களாலதான் இவ்வளவும், எங்கப்பா செய்தது மன்னிப்புக் கேட்டாலும் தீராத பாவம்...” என்று அழுதாள்.

நிருபமா அவளை அருகிலிருத்தி " நீ என்னடா பண்ணுவா... உங்கப்பா செய்ததுக்கு... ஒருத்தர் செய்த பாவத்துக்கு இன்னொருத்தர் ஏன் மன்னிப்புக் கேட்கனும்... அவரவர் செய்தது அவரவருக்கே...

என்பிள்ளை யாருக்கும் கெடுதல் செய்ததில்லை... அவன் என்கிட்ட திரும்பி வந்திருவான்” என்றவரின் கண்களில் கண்ணீர்.

அஜய்க்கோ என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.முதல் நாளிலிருந்து இன்று வரைக்கும் ஷ்ரவனை பார்க்க மருத்துவமனைக்கு தினமும் வந்து செல்கிறான்.

இப்போயிருக்கும் நிலையில் எல்லோருக்கும் ஹரிதாவை நினைத்துதான் பயம்... தினமும் ஷ்ரவனுக்கு பிடித்தமாதிரியே சேலைக்கட்டி பூவைத்து மருத்துவமனைக்கு செல்பவள், அங்கயே இரவு வரை கணவனோடு இருந்துவிட்டு வருவாள்.

இப்போது குழந்தையையும் தன்னோடு தூக்கிச் செல்பவள்... ஷ்ரவனின் அருகில் கையைப்பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பாள்.

அடுத்தநாள் காவ்யா ஷ்ரவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது, ஹரிதா மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு, தலையை ஷ்ரவனின் முகத்தினருகே வைத்து அவனது முகத்தை தடவிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்...

உண்மையில் காவ்யா இதை எதிர்பார்க்கவில்லை, அவளது நிலயைக்கண்டு துடித்தவள், “ஹரிதா” என்று அழைக்கவும் திரும்பி பார்த்து காவ்யாவைக் கண்டதும் புன்னகைத்தாள்...

காவ்யா ஹரிதாவிற்கு எதோ ஆகிவிட்டதோ என்று அஜயைப் பார்க்க, அவன் கண்ணைக் காண்பித்து “ஒன்றும் பேசாத” என்றான். மெதுவாக ஹரிதாவிடமிருந்த குழந்தையைப் வாங்கித் தன் கையில் வைத்துக்கொண்டாள்.

அப்படியே ஷ்ரவனின் ஜெராக்ஸ்தான் குழந்தை... துருதுரு கண்கள்.

சிறிது நேரம் நிற்க ஹரிதா அவர்களைக் கண்டுக்கொள்ளவேயில்லை... அவளது சிந்தனையெல்லாம் ஷ்ரவனின் மீதும், தன் பிள்ளையின் மீது மட்டுமே...

சிறிது நேரம் இருந்து பார்த்துவிட்டு, குழந்தையைக் அவளிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த காவ்யா அஜயின் தோள்களில் சாய்ந்தவள், “ஷ்ரவன் அண்ணா ரிப்போர்ட் பார்த்தேன் எதாவது மிராக்கிள் நடக்கனும்ங்க, ஆனால் ஹரிதா இப்படியாகிட்டாளே எல்லாம் என்னாளதான்” என்று குற்றவுணர்ச்சியில் அழுதாள்.

ஹரிதாவின் செயல் கிட்டதட்ட இரண்டுமாதம் இப்படியே செல்ல,ஷ்ரவன் ஹரிதாவின் மகளுக்கு பெயர்க்கூட வைக்கவில்லை,எல்லோரும் பாப்பா என்றே அழைக்கின்றனர்.

மூன்று மாதம் முடிந்த நிலையில் பிள்ளை கவிழ்ந்துவிழ ஆரம்பித்தாள்.

அன்று மருத்தவமனைக்கு சென்றவள் எப்போதும் போல பிள்ளையை ஷ்ரவனின் அருகே படுக்கவைத்தாள்... குழந்தை தகப்பனைப் பார்த்து திரும்பி கவிழ்ந்துப் படுத்தாள்

ஹரிதா பார்த்துக்கொண்டிருக்கவே மகள் தன் தகப்பனை நோக்கி கவிழ்ந்துப்படுக்கவும், மூக்கு இடிச்சுக்குமே என்று பதறியவள் மகளை தூக்குவதற்கு முயற்சிக்க, அதிர்ந்தாள் சந்தோஷத்தில் இரண்டுமாதமாக வற்றிப்போயிருந்த கண்ணீர் சரசரவென்று கண்களிலிருந்து தன்னையறியாமலே வந்தது, தொப்பென்று சேரில் இருந்தவள் மகளையும் அவளது கையைப்பிடித்திருக்கும் கணவனின் கையையும் பார்த்திருந்தவள், மெதுவாக அவனது கண்களைப் பார்க்க அது பாதிவிழித்தும் விழியாமலும் இயலாமையால் திரும்பவும் மூடிக்கொண்டது...

விழித்தவன் மீண்டும் பழையநிலைக்கே போய்விட்டானோ என்று பதறி "ஷ்ரவன்" என்று அவனது கன்னங்களைத் தட்டி மீண்டும் "ஷ்ரவன்" பதறி பதறி அழைத்தாள்.

ஹரிதா போட்ட சத்தத்தில்... என்னவோ? என்று நர்ஸ் ஓடிவர, ஷ்ரவன் கண் திறக்கமுடியாமல் கஷ்டபடுவதை பார்த்த நர்ஸ் டாக்டரிடம் தகவல் கூற, வந்து பார்த்தவர்கள் உடனடியாக ஷ்ரவனை பரிசோதனை செய்தார்.

அவன் தெளிந்துவிட்டான், ஆனால் மூன்று மாதத்தில் எலும்பும் தோலும் மட்டுமே ஷ்ரவனிடம் சரியாக இருந்தது... உடனே வீட்டிற்கு தகவல் சொல்லியவளுக்கு என்னவென்று சொல்லத்தெரியவில்லை...

மறுபடியும் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு... அவனது கையைப் பிடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.

ஷ்ரவன் கோமாவிலிருந்து மீண்டுவிட்டான் என்று சந்தோஷமாக இருந்தாலும், பயமும் இருந்தது ஹரிதாவிற்கு.

இப்படியாக ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தவனை, வீட்டிற்கு அழைத்து சென்றனர்...

இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை, வீட்டில் கட்டிலில் படுக்க வைத்திருந்தனர்...

தொண்டையில் போட்டிருந்த உணவுக்குழாய்கள் நீக்கிருந்தாலும், அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறவேண்டும், அதன்பின்னே ஷ்ரவனால் சரியாக சாப்பிடவும், பேசவும் முடியும்.

ஹரிதா அவனருகே அமர்ந்திருக்க, பால் டம்பளரைக்கூட பிடிக்கமுடியாது ஷ்ரவனின் கைகைளைப் பார்த்தவள், அவளே மெதுவாக குடித்து முடிக்கும் வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தாள்.

இது ஒன்றும் கனவில்லையே கண்விழித்ததும் எல்லாம் மாறுவதற்கு... அவன் தேறிவரவே மாதங்களாகும்... அவனுக்குத்துணை இப்போது ஹரிதாவும், மகளும்தான்.

நிருபமா மகன் எழும்பி வந்ததையே கொண்டாடித் தீர்த்துவிட்டார்.... ஒரு நாளைக்கு அவர் நினைக்கின்ற நேரமெல்லாம் வந்து வந்து மகனின் தலையை வாஞ்சையாகத் தடவிவிடுவார்....

ஷ்ரவன் எழும்பி வந்ததை இன்னும் அவரது மூளை நம்பவில்லைப்போல... அதர்க்காகத்தான் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்கின்றாரோ என்னவோ? இந்த சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்று ஆயிரம் வேண்டுதல்களை வைத்தார்.

இருந்த வேதனையில் புதுவரவான ஷ்ரவனின் மகளுக்கு செய்யவேண்டியதை யாரும் செய்யவில்லை...

மருத்துவமனையிலிருந்து வந்த அடுத்த நாளே “பிள்ளையின் பெயர்” என்ன என்று கேட்கவும்... எல்லோரும் விக்கித்து நின்றனர்.

ஏன் என்று மெதுகுரலிலும் அவன் தன் சைகையினாலும் கேட்டான்... எப்படி பதில் சொல்வர் இந்தக்கேள்விக்கான பதிலை.

எல்லோரும் அமைதியாக இருக்கவும், அவனுக்கே புரிந்தது... உடனே தனது தாயை அருகில் அழைத்தவன் “நம்ம பாப்பாவுக்கு பெயர் வைக்கிற பங்க்ஷன் வைக்கலாமா” எனக் கேட்டான்...

மகன் கேட்டதுக்கு பிறகு செய்யாமாவிருப்பாரா என்ன... அடுத்த வாரத்துலயே ஏற்பாடுகள் செய்யபட்டது.

அன்று இரவு மகள் பசிக்கு அழ, அவள் பால் கொடுப்பதற்குள் அவ்வளவு ஆர்பாட்டமும் அழுகையும் செய்துவிட்டாள். உடனே ஷ்ரவனின் அருகிலயே அமர்ந்து பால் கொடுக்க, தன் மகள் செய்த சேட்டையை பார்த்தவனுக்கு அவ்வவளவு சிரிப்பு, ஹரிதா "பிடிவாதம் அப்படியே உங்களை மாதிரி" என்றாள்...

உடனே ஷ்ரவன் அவளது தோளில் தாடையை வைத்து அப்படியே அமர்ந்து இருக்கவும், சிறிது நேரத்தில் ஹரிதாவின் தோளில் ஈர உணர்வு, சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க அவன் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வந்தது.

ஷ்ரவன் அப்படியே பிள்ளையின் கால்களினருகே ஹரிதாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

“நான் எழும்பி வராமலேயே போய் இருந்தால், என் பிள்ளையும் என் மனைவியும் எப்படி இருப்பாங்கன்னு யோசித்துப் பார்த்தேன்...

என் மகளைப் பார்க்காமலேயே போய் இருந்து இருப்பேன் இல்லை" என்று ஹரிதாவிடம் கேள்விகளை கேட்க... தன் தேவதை பிள்ளையின் காலை மெதுவாக வருடி கொடுத்தான்...

தூங்கிய பிள்ளையை அப்படியே படுக்க வைத்து, ஷ்ரவனது அருகில் தான் படுத்துக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் அவனை கட்டிக் கொண்டு படுத்துவிட்டாள்...

ஸ்ரவனால் இப்பொழுது நடக்க முடிந்தாலும் யாராவது ஒருத்தர் துணை வேண்டும் நடப்பதற்கு... பிடித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்திருந்தான்...

ஹரிதா பழைய ஹரிதா இல்லை, எப்பொழுதும் துருதுருவென்று சண்டை போடும் ஹரிதா இல்லை.எல்லாவற்றையும் அமைதியாக புன்னகையுடன் கடந்து போகும் ஹரிதாவாக மாறி இருந்தாள்...

அவள் பட்ட வேதனையை ஷ்ரவனிடம் பகிர்ந்து கொள்ளவே இல்லை அவனுக்கு கஷ்டமாக இருக்குமே என்று தனக்குள் அடக்கிக் கொண்டாள்...

அடுத்து வரும் வாரத்தில் ஹரிதாவின் குழந்தைக்கான பெயர் சூட்டு விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிருபமா ஒவ்வொரு விஷயத்திற்கும் மேலே ஓடி வருவார் ஷ்ரவனிடம் கேட்டு கேட்டு எல்லாமே செய்தார்... மறுபடியும் ஏதோ கேட்பதற்காக மேலே ஏறி வந்து அவனருகில் அமர்ந்தவர், அவனிடம் கேட்கவும் அவரின் கையை பிடித்தவன், “நிரு பேபி இது என்ன புதுசா கேட்டு கேட்டு செய்றீங்க. இதுக்கு முன்னாடி நீங்க என்ன செய்தாலும் நான் கேட்டதில்லையே, இப்ப இப்படி கேக்குறீங்க... எப்பவுமே நீங்க தானே எல்லாம் செய்றீங்க அதேபோல இப்போது செய்யுங்க நான் எதுவும் சொல்லப் போறதில்லை.. உங்க பேத்திக்கு எப்படி செய்யனும்னு நினைக்கிறீங்களோ அப்படியே செய்ங்க” என்றான்...

நிருபமா அப்படியே அவனது கைகளை பிடித்து தனது முகத்தில் வைத்துக்கொண்டு அழுதார்... “நீயில்லாமல் இவ்வளவு நாளும் வீடு வீடாகவே இல்லை... நீ திரும்ப வந்ததும் சந்தோஷம் தாங்க முடியலை... திரும்ப எழுந்து வரணும்னு வேண்டாத தெய்வமில்லை...” என்று அழுதவரை.

“நிரு பேபி எப்போ அழுகாச்சி பேபியாக மாறினாங்க...” என்று அவரது கன்னத்துப்பிடித்துக் கொஞ்சியவன்... அவரை சமாதானப்படுத்தியிருந்தான்.

நிருபமா சிரித்துக்கொண்டே “போடா...” என்றவர் கீழே இறங்கிவிட்டார்.

அவர் சென்றதும் தலையணையில் சாய்ந்தவனின் கண்களில் கண்ணீர் தானாக வடிய... உள்ளே வந்த ஹரிதா கவனித்து பதறி ஓடிவந்து " என்னச்சு? எங்கயாவது வலிக்குதா?...” என்று கேட்டுக்கொண்டே... அவனது உடலைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க... அவளது கையைப்பிடித்தவன்... “எனக்கு ஒன்னுமில்லை... நான் நல்லாகிட்டேன் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை... ஏன் எல்லாரும் இப்படி பயந்து பயந்து என்ன சாவடிக்கறீங்க...அப்படியே செத்துப் போயிருந்திருக்கலாம்போல” என்றதும் தான் ஹரிதா அடித்துவிட்டாள் ஷ்ரவனை...

“என்ன நினைச்சிட்டிருக்க நீ... நீ செத்துப்போயிட்டனா நானும் பாப்பாவும் என்னடா செய்திருப்போம்... வார்த்தையை இப்படி பேசுற, வலிக்குது நீ மறுபடியும் எழுந்து வரணும்னு என்ன பாடுபட்டிருப்பேன்... என்னை எப்பதான் புரிஞ்சுப்பியோ” என்றவள்... அடித்த இடத்தினை தடவிக்கொடுத்துக்கொண்டே பேசினாள்.

அப்படியே அவளை கட்டிக்கொண்டான்... “முடியலைடி வீட்டுக்குள்ளவே இருந்துட்டு... சரியா நடக்ககூட முடியலை... எல்லோருக்கும் பாரமா இருக்கமோனுத் தோணுது... இன்னைக்கு பத்து நேரம் அம்மா மேல ஏறி வந்து என்கிட்ட கேட்டுட்டுப் போறாங்க என்ன செய்யனும்னு... எல்லாரும் இப்போ என்னை பேஷண்ட் மாதிரியே நடத்தறீங்க... நான் கம்ப்ளீட்டா நார்மல்தான்... என்ன மூணு மாசத்துல கொஞ்சம் வீக்கா இருக்கேன் அவ்வளவுதான்... ப்ளீஸ் நீயாவது என்னை நார்மலாப் பாரு” என்று பேசினான்.

ஹரிதாவிற்கு புரிந்தது தலையாட்டியவளைப் பார்த்து... “ரெண்டு மாசம் நான் படுக்கையில் இருந்தபோது நீ வந்ததெல்லாம் எனக்கு தெரியும் ஆனா என்னால பதில் சொல்ல முடியாது அவ்வளவுதான்.

என்ன பேசின? என்ன நடந்தது? எல்லாம் எனக்கு ஞாபகம் வரலை... ஆனா கடைசி கொஞ்ச நாட்களா நீ பேசினதெல்லாம் காதில் கேட்டுச்சு... என்னுடைய எதிர்வினைய காண்பிக்க முடியாதளவுக்கு என் உடம்பு இருந்தது... பாப்பா வந்து விழும் போதுதான் என் கை உணர்ந்தது...

என்னால பாப்பா பிடிக்கணும்னு ஆசையில்தான் என்னையறியாமலேயே சட்டென்று கைகளை பிடித்து இருந்தேன், அப்போது தான் கண்ணையும் திறக்க முடிஞ்சது...

நீ என் கையைப்பிடித்து பேசிகிட்டே இருப்பதான, அப்போ என்னுடைய உள்ளுணர்வைத் தூண்டிட்டே இருந்தடி... எழும்பு எழும்பு என்று அந்த நாட்கள்ல என் மூளை என்ன உந்திக்கிட்டேயிருந்தது...

நீ வரும்போதே உன் வாசம், வச்சுட்டு வர்ற மல்லிகைப்பூ எல்லாம் அப்படியே ஒரு உணர்வு பரவும், ஆனால் எழும்ப முடியாம தவிப்பா இருந்தது தெரியுமா,நரகவேதனை அது தெரியுமா...

மனைவியவும், பிள்ளையவும் பக்கத்துல வச்சுட்டு பேசமுடியாமா, பார்க்க முடியாமா, கொஞ்சமுடியாமல் ஜடம்மாதிரி படுத்திட்டிருக்கறதெல்லாம் பெரிய வேதனைடி...” என்றவன் அவளை லேசாக இறுக்கினான்.

“இப்படி எல்லாரும் என்னை இன்னும் அதே மாதிரியே பேஷண்ட்டா பாக்கறீங்க... எனக்கு அதுதான் நியாபகம் வருது...” என்று வருத்தப்பட்டான்.

ஹரிதா அவனது முதுகை நீவிவிட்டவள்... அப்படியே அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஹப்பா... கண்ணுமுழிக்க முன்னாடி தினமும் முத்தம் தந்த... இப்போ வீட்டுக்கு வந்தபிறகு ஒரு முத்தத்தைக்கூடக் காணோம்” என்று பழைய ஷ்ரவனாக பேசினான்.

ஹரிதா வாயத்திறந்து ஆஆ என்று ஷ்ரவனைப் பார்த்திருக்க... அப்படியே இதழிலயே லேசாக முத்தம் வைத்தான்...

அதற்குள்ளாக பிள்ளை அழவும் எடுத்தவள் பசியாற்றி கீழே சென்று நிருபமாவிடாம் கொடுத்துவிட்டு வந்தவள்... ஷ்ரவனை மெதுவாக எழுப்பி தன்தோளோடு சேர்த்து பிடித்தவள், அவனை நடக்கச் சொன்னவள் படியிறக்கி கூட்டிக்கொண்டு வந்தது வீட்டின் முன்னறைக்கு... அக்க்ஷராவின் குழந்தைகள் ஓடிவந்து அவனது கைகளைப் பிடிக்கவும் சிலிர்த்துவிட்டான்...

அங்கயே உட்கார வைத்து ஹரிதாவும் அவனருகிலயே அமர்ந்துக்கொண்டாள்...

வீட்டில் எல்லோரும் அவனிடம் முகம்பார்த்து பேசிக்கொண்டிருக்க, ஷ்ரவன் ஹரிதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்...

ஒரு நேரத்தில் சண்டைப்போட்டு வேண்டாம் என்று அவளை ஒதுக்கி, பிரிந்திருந்தபோதெல்லாம் அவள் மேல்கொண்ட அவனின் காதலால்தான் மீண்டும் அவளோடு இணைந்தான்...

ஆனால் இப்போது உணர்ந்துக்கொண்டிருப்பது ஹரிதாவின் சுயநலமில்லாக் காதலைத்தான்.

இரவில் படுக்கையில் இருந்த தனது கணவரிடம் நிருபமா பேசிக் கொண்டிருந்தார் “ஷ்ரவன் இப்போது நம்மகிட்ட திரும்பி வந்திருக்கானா அதுக்கு முழுக்காரணம் ஹரிதா மட்டுமே.

நாமெல்லாம் அவன ஒரு நோயாளியாகப் பார்த்தோம், ஆனால் அவ மட்டும்தான் அவளோடு உயிரா, உணர்வா ஒரு உயிருள்ள மனுஷனா பார்த்து, இரண்டு மாசம் கழித்து உயிரோடு மீட்டுக் கொண்டு வந்துட்டா, கல்யாணத்தின்போது கூட இந்த பெண் என் மகனோடு வாழ்க்கையே எப்படி பாழாக்கப்போகுதோ என்று வேதனைப்பட்டேன், ஆனால் இன்னைக்கு என் மகன் உயிரோடு திரும்பி வர்றதுக்கு காரணமே ஹரிதாதான்” என்றவர் அப்படியே தேவனந்தின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு தேம்பினார்.

தேவானந்த் “உண்மைதான்மா...”

“அவனில்லைனா இந்த வீடும் உயிர்ப்போடு இருந்திருக்காது...

அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் சரியானதும் நம்ம கம்பேனியவே எடுத்து நடத்தட்டும்... வேலைக்குனு அடுத்தவன்கிட்டப்போய் நிற்கவேண்டாம்.

நானும் என் பேரப்பிள்ளைகளோடு வீட்ல இருந்துக்குறேன்... புத்திரசோகம் எப்படி இருக்கும்னு கண்முன்னாலக் கண்பித்தூவிட்டான்... போதும் பணம் சேர்த்ததெல்லாம்” என்று முடிவெடுத்திருப்பதாக கூறினார்.

நிருபமாவிற்கோ ஆச்சர்யம்... அவரது தாடையைப் பிடித்து “என்ன ஒரு ஆச்சர்யம் சிங்கம் ஓய்வெடுக்கப்போகுதே... அடடே ஆச்சர்யம்” என்று தேவானந்தை கிண்டல் செய்து பேசினார்... அந்தக்குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் திரும்பி வந்திருந்தது.

அத்தியாயம்-22

தனது மகளின் பெயர் வைக்கும் விழாவில் ஷ்ரவன் அழகாக கிளம்பி மகளை தனது கையில் வைத்திருந்தான்...

மகள் செய்யும் சேட்டையை அவ்வளவு ரசித்தான்.கையை காலை ஆட்டி தனது தந்தையை பார்த்து சிரித்தாள்.. ஷ்ரவன் பிள்ளையை யார் கையிலும் கொடுக்க மாட்டேன் என்று தனது கையிலயே வைத்திருந்தான்.

விழா ஆரம்பித்ததும் எல்லாரும் வந்து ஷ்ரவனைத்தான் பார்த்திருந்தனர் அதிசயமாக... அவனது தோற்றமே முழுவதும் மாறியிருந்தது. ஆனாலும் ஹரிதா அவனது கையைப் பிடித்து “யார் என்ன வந்து எது கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுங்க...

இது நாம பிள்ளையோட பங்கஷன் சரியா” என்று அவனிடம் சொல்லி இருந்தாள். இப்பொழுதெல்லாம் அவன் சிறிய விசயமென்றாலும் கோபப்பட ஆரம்பித்து இருந்தான், ஆனால் இதற்கு எதிர்மாறாக ஹரிதா பொறுமையாக மாறியிருந்தாள்.

அஜய் காவ்யாவுடன் வந்திருந்தான், காவ்யாவிற்கு இப்பொழுது ஏழாவதுமாதம் வயிறு மேடிட்ட வயிறுடன் அழகாக இருந்தாள், ஆனால் இருவரின் முகத்தில்தான் ஒளியில்லை...

தங்களால்தான் ஷ்ரவன் இப்படியிருக்கான் என்று குற்றவுணர்ச்சி.

பெங்களூரிலிருந்து, ஹரிதாவின் பெற்றோரும், அவளது அக்கா சஹானா குடும்பத்தாரும் வந்திருந்தனர், அனைவரும் வந்ததும் விழாவை ஆரம்பித்திருந்தனர்...

தம்பதிகள் இருவரும் அமர்ந்திருக்க மகளை இப்போதும் தனது மடியிலயேதான் வைத்திருந்தான் ஷ்ரவன்.

பிள்ளையின் பெயரை ஹரிதா அவன் மருத்துவமனையில் இருக்கும்போதே தெரிவு செய்திருந்தாள்... அது ஷ்ரவனுக்கு மட்டுமே அதுதெரியும்.

இப்போது மகளின் காதில் இருவரும் "ஷன்மதி" என்று மூன்று முறை சொல்லி அழைத்தனர்...

விழா முடிந்ததும் அஜயும், காவ்யாவும் அவனதருகில் வந்தனர்... அஜய் ஷ்ரவனின் கையைப்பிடித்து “எங்களால்தான் உனக்கு இப்படி ஒரு நிலமை, எங்களைப்பற்றி யோசிச்சமே தவிர... நீ இதுல தலையிட்டா உனக்கு என்ன பிரச்சனை வரும்னு யோசிக்காமவிட்டது எங்களோட தப்புதான்” என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டு மருகினர்.

காவ்யாவினைப் பார்த்து ஷ்ரவன் "நீ எதுக்குமா அழற, உங்கப்பா செய்த தப்புக்கு நீ என்ன பண்ணுவ விடுங்க... அவரால் உங்களுக்கு எதுவும் வராம இருக்கணும், கவனமா இருங்க” என்றதும்... காவ்யா உண்மையை சொல்வதற்குள் அஜய் அவளது கையைப்பிடித்தவன்... “வா காவ்யா நம்ம சாப்பிட்டுவரலாம்” என்று அப்படியே இழுத்துக்கொண்டு வந்தவன்.

“காவ்யாவிடம் உங்கப்பா இறந்தது அவன்கிட்டயிருந்து மறைச்சிருக்கோம்... ஹரிதாவுக்குகூட தெரியாது உளறிடாத.

இரண்டுபேருமே அதை விரும்பமாட்டாங்க... உயிருக்குப் பதிலா உயிரானு ஷ்ரவன் கேட்ருவான்... உங்கப்பா பற்றிய தகவல் அங்க போகக்கூடாது சரியா” என்றுவிட்டான்.

ஹரிதா சேலைக்கட்டிக்கொண்டு தலைநிறையப் பூவைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைபவளைக் சைட்டடித்துக்கொண்டு இருந்தான் ஷ்ரவன்.

ஒருகட்டத்தில் மகள் அழவும் பசியாற்ற தங்களது அறைக்குள் வந்தவள், ப்ளவுஸ்ஸைக் கழற்றி தங்களது அறைதான் என்று இருக்க, யாரோ வரும் சத்தம்கேட்டு திரும்பி பார்க்கவும் ஷ்ரவன்.

“எப்படி மேல வந்தீங்க” என்றவளை, ஷ்ரவன் முறைத்துப்பார்க்க...

“சாரி சாரி... இன்னும் கொஞ்சம் பயம் மனசுக்குள்ள இருக்கு,மெதுவாகத்தான் அந்தப்பயம் போகும்... என்ன வந்திட்டீங்க?..”

“கொஞ்சம் படுத்தா நல்லயிருக்கும்போல இருந்தது அதான் வந்தேன், நீ சாப்பிட்டியா?..” அவள் இல்லை எனத் தலையாட்டவும்... தன் அன்னைக்கு அழைத்து மேல சாப்பாடு கொண்டுவரச் சொன்னான், “அவளோ பாப்பா மடியிலிருக்கா சாப்பிட முடியாது” என்றதும், “இப்போ எதாவது தொந்தரவு செய்தா உங்க மகள் அழுதே ஊரக்கூட்டிடுவா” என சிரித்துக்கொண்டே மகளது சேட்டையை சொன்னவளுக்கு,சாப்பாட்டை எடுத்து ஊட்டினான்.... அவன் கொடுக்க வாங்கி சாப்பிட்டவளின் பசியை அவள் உணர்ந்தாளோ இல்லையோ, ஷ்ரவன் உணர்ந்தான்.

“இவ்வளவு பசியை வச்சுக்கிட்டா சாப்பிடாம சுத்திக்கிட்டு அலைஞ்ச, ஏன்டி சாப்பிட்டிருக்க வேண்டியதுதான” என அதட்டினான்.

கண்களில் அப்படியே கண்ணீர் கட்டி நிற்க “இந்த நாலு மாசமா நான் சாப்பிடுறேனா? நான் இருக்கேனான்கூட யாருக்குமே தெரியாது.எல்லாரும் அவங்கவங்க கவலையிலேயே இருக்கும்போது என்னை கவனிக்க யார் இருந்தா

சில நேரம் சாப்பிடுவேன் பல நேரம் பட்டினியாய் இருந்தேன்...

ஒரு மாசம் அம்மா இருந்து கவனிச்சிட்டாங்க பாவம் அவங்க என்ன கவனிப்பார்களா? பாப்பாவுக்கு கவனிப்பாங்களா? அங்க அப்பாவை நினைத்து கவலைப்பட்டாங்க.

அதுதான் நான் அனுப்பிவிட்டேன்.

இல்லைனா இங்கயிருந்து என்னை பார்த்து பார்த்து நொந்து போவார் என்று எனக்கு தெரியும்.

நிறையநாள் பட்டினாயாக இருந்திருக்கேன்.இப்போ பாப்பா வேற அடிக்கடி பசிக்குனு அழறா... அதனால எனக்கும் அதிகமா பசிக்குது.

நீங்க அள்ளித் தரும்போது பசியில அப்படியே அவ்வளவையும் சாப்பிட்டுடேன்” என தலைக்குனிந்தே சொல்லவும், கைகழுவி வந்தவன் அவளைக் கட்டிக்கொண்டான்.

அவளது காதில் மெதுவாக “பாப்பாவை தொட்டில்லப் போட்டுட்டுவா” என்று ரகசியம் பேசவும், அவனை அதிசயமாகப் பார்க்க...

“என்னடி அப்படி வச்சக்கண்ணு வாங்கமா பார்க்குற... அதே ஷ்ரவன்தான் போ... போய் பாப்பாவ படுக்க வச்சிட்டு வா” என்று கண்ணடித்தான். எழுந்தவள் கதைவையெல்லாம் சாத்திவிட்டு, மகளையும் தொட்டிலில் போட்டு வந்தவளைப் படுத்துக்கொண்டே பார்த்திருந்தவன் அவள் வருவதற்குள் தனது உடையை மாற்றியிருந்தான்.

ஹரிதா அவனது அருகில் வந்ததும் அவளது கையை பிடித்து தனது நெஞ்சில் வைத்தவன் “மயக்கறடி மாயக்காரி... இப்போதான் நீ ரொம்ப அழகா, அப்படியே செம ஹாட்டா இருக்கடி” என்று அவளது கைகளில் முத்தம் வைக்க... நெடுநாளைக்கப்புறமான முத்தம்...

சிலிர்த்தவளை தன் நொஞ்சோடு அணைப்பதற்காக வளைக்க, “அவளோ உங்க உடம்பு இன்னும் சரியாகலை எப்படி” என்று கேட்க...

ஷ்ரவனோ “அதெல்லாம் சரியாகிட்டு வேணும்னா செக் பண்ணிருப்பாரு” என்று கல்மிஷமாகப் பேச...

ஹரிதா “சரிதான் இன்னைக்கு நீங்க ஒரு மார்க்கமா இருக்கீங்க... நம்ம பாப்பா பங்க்ஷன்தான் நடந்திட்டு இருக்கு... நியாபகமிருக்கா. நம்ம அங்கயில்லைனா தேடுவாங்க.”

“அதெல்லாம் நிரு பேபி பார்த்துப்பாங்க தொந்தரவு செய்யாதிங்க டயர்டா இருக்குணு சொல்லிட்டு வந்துட்டேன்...” என்று கண்ண சிமிட்டியவன்.

ஹரிதாவின் கழுத்தினூடே கைகொடுத்து தன் பக்கமா வளைத்து அவளது முகத்தில் முத்தங்களை அள்ளித்தெளிக்க...

கணவனுக்காக ஏங்கியிருந்தவள், அவனது உதட்டினைக் கடித்து இழுத்து தன்னோடு வைத்துக்கொள்ள... அவன்தான் இப்போது அவளது முதுகைப்பற்றி லேசாக விடுவிக்க.

“என்னை காக்க வச்சதுக்காக இந்த தண்டனை” என்று அவனது கன்னங்களை கடித்து வைத்தாள்.

“ஹய்... இந்த தண்டனை சூப்பரா இருக்கே” என்று ஷ்ரவன் கூறியதும்... மீண்டும் கடித்து வைத்தாள்... “ ஸ்ஸ்... டி வலிக்குதுடி ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்கு இப்படியா கடிச்சுவைப்ப...” என்று கன்னங்களைத் தடவி விட்டுக்கொண்டே சொன்னான்.

“அது கடிச்சது நல்லாயிருக்குனு சொன்னீங்தான,இனி சொல்வீங்க?...”

அவளிடம் பேசிக்கொண்டே சேலையை இடையில் கைவிட்டு அவிழ்த்துவிட்டான்.

என்னப்பண்றீங்க என அவனது கையை நகர்த்த முடியவில்லை.

அவளைப் பார்த்து சிரித்தவன், “ரிது பேபி அன்றைக்கே சொன்னேன்... மாமான் ஹெல்த்துதான் கொஞ்சம் வீக்கு... மற்றபடி எல்லாம் இருக்க வேண்டியதெல்லாம் அங்கங்க சரியா இருக்கு... அப்புறம் ஒன்னே ஒன்னுதான் சரியா வேலை செய்யுதானுப் பார்க்கணும், அதுக்கு நீ வேணும் பேபி” என்றவன், மனைவியின் கையைப்பிடித்து “வேணா நீயும் செக் பண்ணிக்கோ” என்றதும்... “ரொம்ப பேசுறீங்க ஷ்ரவன்” என்று அவள் அழகாக வெட்கப்பட்டாள்.

ஷ்ரவன்மீது பட்டும் படாமலும் படுத்திருந்தவளைப் கீழத் தள்ளிப்படுக்க வைத்தவன், அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டே, சட்டையின் ஹூக்கை கழற்ற, கண்கள் கிறங்கி அவனது பார்வையை சந்திக்க முடியாமல் மூடிக்கொண்டாள்.

அவ்வளவுதான் ஷ்ரவன் அப்படியே அவளது குவிந்த தாமரையைத் தன் வாயில் கவ்விக்கொண்டான், ஹப்பா ஹரிதாவின் நிலை... என்ன உணர்விது... கிடைக்காது என்று நினைத்து, மறத்துப்போண உணர்வுகளை, தனது நாவினால் அவளுக்கு தூண்டிக்கொண்டிருந்தான்.

அவன் வாய் வைத்ததும் அவனது வாயில் ஈர உணர்வு என்னவென்று பார்க்க.அவளது தனங்களில் இருந்து வந்த அமுதம்... அவன் ஒன்றை மறந்துவிட்டான்,தனது ரிதுபேபி தனது பிள்ளைக்கு பாலூட்டும் அன்னையென்று... மாயக்கண்ணனாக அவளை நிமிர்ந்துப் பார்க்க... மனையாளோ நீ முன்னேறு என்று சமிக்ஞை கொடுக்க... அவ்வளவுதான் விடுவானா அவன் மங்கயவளின் கொங்ககளை தனது உணவாக்கி, அதிலூறும் அமுதத்தையும் குடிக்க.

கணவனின் பின்னந்தலையை நன்றாக பிடித்து வழிநடத்த... கைகள் மொத்த ஆடைகளையும் ஒவ்வொன்றாக கழட்டி எறிய, வாய் தனது வேலையை செவ்வனே செய்யதுக்கொண்டிருந்தது.

ஹரிதாவிற்கு சிறிது பயமே இருந்தாலும், அவனது தேடலுக்கு இடமளித்தவள்.

அவனுக்கு ஈடாக செயல்படத் தொடங்கினாள்... கணவனது உடல் நிலையும் முக்கியமல்லவா, அவனைக் காயப்படுத்தாமலயே அவனை வழிநடத்தினாள்.

சிறிது திணறினாலும்... நான் ஆண்மகன் என்ற திமிர் இருக்கத்தானே செய்யும்...

இடுப்பில் தலைவைத்து தனது மீசையினால் தேய்த்து அவளுக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியவன்

அவளது பெண்மையை லாவகமாகத்தேடி அவளுக்குள் தன்னை இறக்கியவனுக்கு புது தெம்பு வந்ததுப்போல செயல்பட்டான்... தனது ஆண்மையை நிருபித்தான்.

எப்போதும் அவளுக்காக பார்ப்பவன்... இன்றோ வேகத்தின் உச்சம், மனையாளின் தேகமெங்கும் அவனது செல்லக்கடிகள்... அவனது மனதும் சமன்படவேண்டியதிருந்தது, தன்னை நிருபிக்கவேண்டும் என்று அவனின் செயல் இருக்க... உன்னை நானறிவேன் என்று ஹரிதாவின் செயல்களும் இருந்தது.

அவளின் உடலில் தாழம்பூவாசமடிக்க, அவளின் செவ்வரளி மேனியில் தன்னைத் தொலைத்தான்...

அவளை ஆண்டுக்கொண்டிருந்தவன்... மேலும் கீழும் இயங்க... அதற்கு இணையாக மனையாளின் கொலுசொலியும் கீதம் வாசிக்க பாலைவனமாக உணர்ச்சியற்றிருந்த இருவரின் தேகமும் முட்டி மோதிக்கொள்ள... தீ.. தீ... இருவரின் உள்ளும் புறமும்... கணலாக இருந்த தீ கொழுந்துவிட்டெரிந்தது...

ஒவ்வொரு அசைவிற்கும் மனையாளின் இதழில் முத்தம், மார்பில் முத்தம் என்று முத்தங்கள் இடமாறினாலும் எண்ணிக்கை கூடியது.

தன்னை அவளுக்குள் தேடியவனின் தேடல் முடிவுபெற்றதும், அவள் மீதே கவிழ்ந்து விழுந்தவன் சிறிது ஆசுவாசப்டுத்திக்கொண்டு, ஹரிதாவின் நாடித்தொட்டு நிமிர்த்தி,தனது புருவம் உயர்த்தி “எப்படி” என்றுக்கேட்க.

மொத்தமாக சிவந்தவள் “சீ...” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

இருவரும் குளித்து உடைமாற்றி படுக்கவும்,

பிள்ளை அழவும் பதறி ஓடிப்போய் எடுத்தவளுக்கு இப்போது என்ன செய்ய என்று முழித்தவள் பிள்ளைக்கு பசியாற்ற முயற்சிக்க, சிறிது பயம்தான் மகளைப்பற்றித்தான் தெரியுமே பசியாறவில்லை என்றாள் எப்படி ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று, மகள் இப்போது அமைதியாக பால் குடிக்கவும்தான் நிம்மதியானாள்.

ஷ்ரவன் “என்னடி முழிச்சிட்டு இருக்க...” என்றதும்அவனது வாயில் லேசாக அடித்தவள்... " சின்ன பிள்ளைக்குள்ளத பெரியபிள்ளைக் குடிச்சுட்டு... அதுதான்"

“பாப்பா அழுதா எப்படி சமாளிக்க” என சிணுங்கியவளைப் பார்த்து, அவளது காதில் எதோ சொல்லவும்.

“கேடி... இதெல்லாம் எங்கயிருந்து கத்துக்கிட்டீங்க” என்று அவனது கையில் அடிக்க.

“இதெல்லாம் கத்துதரக்கூடிய விசயமாடி... மாமாவே பார்த்துக் கத்துக்கிட்டதுதான்டி...” என அவளது இதழைப்பிடித்து திருகியவன் அப்படியே கடித்துவைத்தான்.

"ஆமா ஆமா சொல்லித்தராமலயே படிச்ச பாடத்துக்கான பலன்தான இது” என்று மகளை தூக்கி அவனது கையில் கொடுக்க... தகப்பனின் மடியில் வைக்கவும் என்ன புரிந்ததோ பொக்கை வாயைக் காண்பித்து சிரிக்கவும்,ஹப்பா ஷ்ரவனின் உள்ளத்தில பூச்சாரல் மகளின் காலில் முத்தம் வைக்க...

அவனின் மீசை குத்த கூச்சமாக இருக்கவும் காலைக் காலை உதைத்து அவனது முகத்தில் மிதிக்க... அவனுக்கோ அது ஆனந்தமாக இருக்க சத்தமாக சிரித்தான்... அவனது பழைய சிரிப்பு மட்டுமல்ல வாழ்க்கையும் திரும்பிக் கிடைத்த ஆனந்தமது.

கீழே இருப்பவர்களுக்கும் அவனது சிரிப்பு சத்தம் கேட்டது, குடும்பத்தினருக்கு இப்போதுதான் நிம்மதி.

கிருஷ்ணாவிற்கும் சுமித்ராவிற்கும்,தனது மகளின் வாழ்க்கை என்னாகுமோ என்று கண்ணீர்விட்டு, கவலையில் இருந்தவர்களுக்கு மன நிம்மதியாக இருந்தது.

அவர்களை தொந்தரவு செய்யாமலயே நிருபமா-தேவானந்த் தம்பதியினர் வந்திருந்தவர்களை இன்முகமாக அனுப்பிவைத்தனர்.

இப்படியாக நாட்கள் செல்ல ஷ்ரவனின் அக்கா மேகா, அவளது மாமானார் மாமியாரேடு சென்னைக்கு வந்திருந்தாள். மியாவின் திருமணத்திற்காக... இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம்.

ஆத்விக் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வரமுடியும் என்று குடும்பத்தை மட்டும் அனுப்பியிருந்தான்... ஷ்ரவன் வீட்டு அவுட் ஹவுஸ்ஸில் தங்கியிருந்தனர்.

மேகா மட்டும் இங்கு இருந்தாள்... ஷ்ரவனுக்கு விபத்து நடந்தபொழுது ஆத்விக் மட்டுமே வந்து பார்த்துவிட்டுப் போயிருந்தான்.

மேகா வந்தன்னைக்கு மட்டுமே ஷ்ரவனிடம் பேசியிருந்தாள்.அதன்பிறகு பேசவேயில்லை ஹரிதாவிடமும் பேசவில்லை, பிள்ளையவும் எடுக்கவில்லை...

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,

மேகா ஹரிதாவிடம் கிட்சனிலிருந்து சாப்பாட்டை எடுத்து தரச்சொல்லவும்,அவள் எழுந்து செல்ல.

“ரிது பேபி நில்லு,இங்க வேலைக்காரங்க இருக்காங்கதான நீ எங்கப்போற” என்று கணவன் கேட்டதும்.

திரும்பி வந்தவள் “அது அண்ணி நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி... நாம கவனிக்க வேண்டாமா... தாய் வீட்டுக்கு வந்தா நல்லாயிருக்கும்னு வந்திருக்காங்க” என்று பேச்சை முடிக்கவில்லை.

"அது நிறைய பேருக்கு நியாபகம் இருக்கமாட்டுக்கு இங்க அவங்க வெறும் விருந்தாளி மட்டுந்தான்.என் மனைவிய அதிகாரம் பண்ற வேலையெல்லாம் இங்க செல்லாது.நிரு பேபிக்கு அடுத்ததாக... இந்த வீட்டுல நிர்வாகம் பண்ணப்போறது என் மனைவிதான்.

நிருபேபி நீங்க உங்க அருமை சீமந்த புத்திரிக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சிவிடுங்க. மாமனார் மாமியார் மாயைக்கொஞ்சம் போகட்டும். அந்தப் பணப்பேய்ங்க குணம் உங்க மகளுக்கும் ஒட்டிக்கிட்டு” என்றவன், “ரிது பேபி வா உட்கார்ந்து சாப்பிடு” என்றான்.

ஹரிதாவிற்கு சந்தோஷம்... என் கணவன் எனக்காக நிற்கின்றான் என்று பலம் அது ஒரு பெண்ணிற்கு யானை பலத்தை தருமாம்... அப்படித்தான் அவளுணர்ந்தாள்.

ஷ்ரவன் பேசியதைக்கேட்ட அக்க்ஷரா அவனைப் பார்க்க, “பெரியவளே இது உனக்குப் பொருந்தாது, நீ எங்க வீட்டு பெரிய தேவதை,என் மகளைப்போலே” என்று அவளது தலையை ஆட்டிவிட்டு கைக்கழுவச் சென்றான்.

திரும்பி வந்தவன்... அக்க்ஷராவிடம் "ஆனால் மச்சானுக்கு மட்டும் அடிக்கடி பிசாசா தெரியறியாம்... என்னனுக் கொஞ்சம் கேட்டுச்சொல்லு" என்றவன் ஸ்ரீராமைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு... ஆபிஸிற்கு கிளம்பினான்.

அக்ஷரா இப்போது "ராம் நான் உங்களுக்கு பிசாசு மாதிரித் தெரியுதானா?" என்க...

“அடியேய்,அவன் கொழுத்திப்போட்டுட்டு போறான்டி... அது நீயும் நம்புறபாரு” என்று தலையிலடித்துக்கொள்ள,அங்கியிருந்த அத்தனைபேரும் சிரிக்க... மேகா வேகமாக தனதறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

அவர்களது ஒட்டுமொத்தக் கம்பேனியும் ஷ்ரவன் கைக்கே கீழ்தான் இப்போது... ஸ்ரீராமிற்கு தனியாக ஒரு கம்பேனியை சொந்தமாக எழுதிக் கொடுத்திருந்தனர்...

மியாவிற்கு பொறாமைத்தான்... இவ்வளவு சொத்துக்கும் ஹரிதா சொந்தக்காரியா வந்துட்டாளே என்று, அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை, அமெரிக்கவிலயே வேலை செய்கின்றான்தான், வசதியென்பது கிடையாது.

மாத வருமானத்தை நம்பித்தான் இருக்கின்றது அவனது குடம்பம்... அவளுடைய கடந்த வாழ்கையை மறைத்துதான் திருமணம் செய்துக்கொடுக்கின்றனர்.

வசதி குறைவானக் குடும்பம்தான் சரி என ஆத்விக்தான் பார்த்திருந்தான்.

ஹரிதா ஷ்ரவன் கிளம்பவும் மகளுடன் வந்து டாட்டா காண்பித்துவிட்டு,அங்கயே மகளுக்கு வேடிக்கை காண்பித்துவிட்டு தோட்டத்த சுற்றிவர...

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மியா வந்து ஹரிதாவிடம் எதோ சொல்ல... அவ்வளவுதான் ஹரிதாவிட்ட அறையில் மியா தோட்டத்தின் புல்வெளியில் விழுந்துக்கிடந்தாள்.

இதைப்பார்த்து ஓடிவந்த மியாவின் அம்மா ஓடிவந்து அவளைத்தூக்கிவிட்டு...

ஹரிதாவை எதோ திட்ட வருவதற்குள் தேவானந்த் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே அருகில் வந்திருந்தார்.

“மாமா இவங்க யாரும் இங்க இருக்ககூடாது... இந்த நிமிஷமே வெளியே அனுப்புங்க” என்று கோபத்தில் பேசியபடி மூச்சுவாங்கியவள் அப்படியே நின்றாள்

அத்தியாயம்-23

அதற்குள் எல்லோரும் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்க விசயத்தைக் கேள்விப்பட்டதும் மேகா “என்ன மம்மி இது உங்க வீட்டு மருமக எங்க வீட்டுப்பெண்ணை எப்படி அடிக்கலாம்” என்று சத்தம்போட

ஹரிதா எதோ பேச வரவும், அவளது கரத்தினைப் பிடித்தவர்... தலைய ஆட்டி “வேண்டாம்” என்று சொன்னார்.

மகளிடம் “என்ன சொன்ன உங்க வீட்டுப்பொண்ணு எங்க வீட்டுப்பொண்ணுனா,இப்போ பேசின பாரு இதுதான் சரியான வார்த்தை.

உங்க வீட்டு பொண்ணு கூட்டிட்டு இப்பவே இந்த நிமிஷமே வெளியே இறங்கு” என்று நிருபமா சொல்லவும் மேகா அப்படியே அதிர்ச்சியில் நிற்கவும் மியாவும் அவளது அம்மாவும் சிறிது அதிர்ந்துதான் பார்த்தனர்.

அவர்களது மகள் தங்கள் வீட்டிற்கு வாழவந்தவள், புகுந்தவீட்டு ஆட்கள் என்று மரியாதை கிடைக்கும் , என கணக்கை தப்பாக போட்டுவிட்டாள்... நிருபமா தனது பிள்ளைகளின் வாழ்க்கைக்காக சிலமுடிவுகள் எதிர்பாரமலயே எடுப்பவர் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை...

“உங்க வீட்டு பொண்ணு எங்க வீட்டு பொண்ணு கிட்ட ஏதாவது வம்பு பண்ணிருக்கும், இலலைனா எதாவது 

வாய்பேசிருப்பா .இல்லனா எங்க வீட்டு பொண்ணு யாருமேலயும் கை வைக்க மாட்டாள்னு எங்களுக்கு தெரியும்.. நான் சொல்றேன் இப்பவே வெளியேருங்க எல்லாரும்” என்று விரட்டி விட்டார்.

என்ன விஷயம் என்று யாரும் ஹரிதாவிடம் கேட்கவுமில்லை ஹரிதா அதை சொல்ல தயாராகவும் இல்லை...

உள்ளே வந்தவளுக்கு அவ்வளவு கோபம்... நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதோடு குணம் மாறுவதில்லை. அதுபோலதான் மியா என்னதான் நன்மை செய்தாலும் அது திரும்ப கடிக்க தான் செய்யும் என்று நினைத்தவள் குளித்து தயாராகி வெளியே வந்தவள்...

நிருபமாவிடம் வந்து “அத்தை நான் காவ்யாவை போய் பார்த்துட்டு வந்துடுறேன்,” கிளம்புறேனு திரும்பிவள்,

மறுபடியும் அவரிடம் சென்று "சாரி அத்தை நான் அடிக்கணும்னு நினைக்கலை, ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் அப்படி , அதுதான் அடிச்சிட்டேன்"

நிருபமா அவளது கன்னத்தை தட்டி "மியாவை பத்தியும் எனக்குத் தெரியும், உன்னை பத்தியும் எனக்குத் தெரியும். நீ எதுவும் டென்ஷன் ஆகாமல் காவ்யாவை போய் பார்த்துட்டு வா” என்று பேசி முடித்துவிட்டார்...

ஹரிதவிற்கு இப்போதுதான் லேசாக புன்னகை வந்தது அப்படியே காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

மியாவின் வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது, தன்னை சொன்னாலும் பரவாயில்லை என் ஷ்ரவனை பேசுறா,நானே இப்போதான் என் ஷ்ரவன் நல்லபடியாக வந்துட்டாருனு நிம்மதியாக இருக்கேன்... அவரைப்போய் எப்படிலாம் சொல்றா, என்று இன்னும் ஆத்திரமாக வந்தது, ஆனாலும் அதை அடக்கி மனதினை சமன்படுத்திக்கொண்டாள்.

காவ்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில், கீதாம்மா அவளை எவ்வளவுதான் நன்றாக கவனித்துக் கொண்டாலும், தன்னுடைய தாயின் நினைப்பு அடிக்கடி அவளுக்கு வந்து கொண்டிருந்ததுதான், அவளுக்கு வளைகாப்பு என்று எதுவும் நடத்தவில்லை...

“காவ்யா வேண்டாம்” என்று அஜயிடம் கூறி விட்டாள்.

மருத்துவமனைக்கு சென்றவள், காவ்யாவின் பிள்ளையை பார்த்ததும் சந்தோஷப்பட்டாள்.சிறிது நேரம் அங்கு பேசிக்கொண்டிருந்தவள் வீட்டிற்கு திரும்பி வரும்போது யோசனையோடே வந்தாள், ‘மறுபடியும் வேலைக்கு சென்றால் என்ன’ சிந்தனையோடே இருந்தாள் .

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தாள். ஏனென்றால் ஷன்மதி அவள் ஒருத்திக்குத்தான் அடங்குவாள். துருதுருவென்று பேபிவாக்கரில் இருந்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் ஒரு வழி ஆக்கிவிடுவாள்.

ஷ்ரவன் மகளை கோபப் பார்வைக்கூட பார்க்கமாட்டான்,அதனால் தகப்பனைக் கண்டால்போதும், அவனின் தோளில் சாய்ந்துக்கொண்டு தாயை ஒருமாதிரிப் பார்த்துவைப்பாள்.

“அப்பாவைக் கண்டதும் என்னையவே முறைச்சுப் பார்க்கறியா” என்று மகளிடம் செல்லச் சண்டையிடுவாள்.

இன்று அவன் வீடு வரும்போது வீடு அமைதியாக இருக்கவும். ‘நம்ம பொண்ணு இவ்வளவு நேரத்தோடு தூங்கிட்டாளா?என்ன?..’ என்று நினைத்துக்கொண்டே வந்தவன். அக்க்ஷராவும் அவளது பிள்ளைகளும் அங்கு முன் அறையில் அமர்ந்திருக்க.... அவர்களோட சேர்ந்து தானும் அமர்ந்து கொண்டான்.

மெதுவாக மருமக்களிடம் “என்னடா வீடு ரொம்ப அமைதியாக இருக்கு என்ன விஷயம்” என்று கேட்டதும்,பிள்ளைகள் “மேகா சித்தி சண்டை போட்டுட்டு வெளியே போய்ட்டாங்க” என்று மெதுவாக சொல்லவும் அவன் மேகா வெளியே போவதை எதிர்பார்க்கவில்லை நேராக தாயிடம் வந்தவன்.

“நிரு பேபி என்னாலதான் மேகா சண்டை போட்டுட்டு வெளியப்போனாளா? நான் காலையிலே பேசியதற்காகவா?..” என்று கேட்கவும், நிருபமா சத்தம் போட்டார் “வீட்டுக்கு வந்தா உடனே டிரஸ் எல்லாம் மாற்றி விட்டு ஆற அமர உட்கார்ந்து பேசணும்... இப்போ உன்னோட அறைக்குப் போ” என்று விரட்டிவிட்டார்.

அறைக்குள் வந்தவன் மனைவி கட்டிலில் அமர்ந்து அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே இருக்க... மகள் அருகில் இருந்து விளையாடிக் கொண்டிருந்ததை கண்டான்.

உடனே ஃப்ரஷ்அப் ஆகி வந்தவன் மகளை தூக்கி வைத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் சாய்ந்தான்...

ஹரிதாவின் முகம் இன்னும் தெளிவாகாததைக் கண்டவன்... அவளது முகத்தை திருப்பி சட்டென்று தன் இதழோடு இதழ் பொருத்தியவன்... அப்படியே தன் பக்கம் இழுத்தவன்... அவளை தன்னோடு நெருக்கியிருந்தான். சிறிது நேரத்தில் விடுவித்தவன் “என்னடி நான் வந்ததைக்கூட கவனிக்காமல் என்ன யோசனை” என்று கேட்டான்.

“நான் வேலைக்கு போகலாம்னு யோசனை, ஆனால் பாப்பாவை விட்டுட்டு எப்படி போறதுன்னு ஒரே யோசனை....”

ஷ்ரவன் அதிர்ச்சியாகி "என்ன வேலைக்குப் போகப்போறியா? வேண்டாம் நான் வரும் போது நீ வீட்ல இருக்கணும், பாப்பாவையும் என்னையவும் நல்ல பார்த்துக்கோ அது போதும்.”

“இல்லப்பா சும்மாவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் அதுதான்” என வார்த்தைகளை இழுக்கவும்,அவனின் முகம் பார்த்து அப்படியே நிறுத்தி விட்டாள்.

“சரி உங்களுக்குப் பிடிக்கலைனா பேகவில்லை...” என்று பேச்சை அப்படியே முடித்துவிட்டாள்.

இரவு உணவின்போது எல்லாரும் ஹரிதா வேலைக்குப் போவதைபற்றி பேசிக்கொண்டிருக்க,நிருபமா தீர்மானமாக கூறிவிட்டார்

“அவ அவளோட சொந்தக் கால்ல நிக்க நினைக்கிறாள்.அதுல தப்பு இல்லை. அதனால் தான் அவ வேலைக்கு போனல் போகட்டும்,பிள்ளை நாங்க பாத்துக்குறோம், எங்களுக்கு பேரப்பிள்ளைகளை பார்ப்பதை விட வேறு என்ன வேலை இருக்கு” என்று தனது முடிவை கூறிவிட்டார்

“சரி நான் சம்மதிக்குறேன்”

“அவள் வேலைக்குப் போகட்டும். ஆனால் ஐடி கம்பெனிக்கு இல்லை, நம்ம கம்பெனிக்கு மேனேஜர் தேவைப்படுது... அது இவளாக இருக்கட்டும், எனக்கும் நம்பிக்கையான ஆளாக இருக்கும்,நம்ம கம்பெனிக்கும் ஒரு நல்ல மேனேஜர் கிடைத்த மாதிரியும் இருக்கும்... என்ன உங்க மருமககிட்ட கேட்டு சொல்லுங்க சம்மதாமா என்று” கேட்டான்.

அவளுக்கு புரிந்தது ஷ்ரவன் தன் அருகாமையே விரும்புகின்றான் என்று.இதைவிட வேறென்ன வேண்டும்...

கணவனது காதல் நெஞ்சமதில் ஒரு இடம் கிடைப்பதைவிட வேறு என்ன வேண்டும், “சம்மதம்” என்று தலையசைத்தாள்.

இரவு உணவு முடிந்து மெதுவாக தோட்டத்தில் உலாவியவனின் அருகில் வந்த தேவானந்த் காலையில் நடந்ததை ஷ்ரவனிடம் சொன்னவர் “என்ன ஒரு ஆளுமைடா ஹரிதாகிட்ட!நீ அவளை மேனேஜர் போஸ்ட்க்கு எடுத்தது எனக்கு சந்தோஷம்டா.”

தேவானந்த் மகனிடம் "மியா என்ன பேசித்தொலைச்சானு தெரியலை,மருமக ஒரு வார்த்தையும் மூச்சுவிடல,கடைசியில் மருகன்கிட்ட பேசிட்டு வெளிய தங்கவச்சுருக்கு... மேகா ஏன் இப்படி மாறிட்டானுத் தெரியலைடா" என்று இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

தனதறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவன், அமைதியா தூங்க முயற்சிக்க.மெதுவாக மனைவியின் கரம் தன்மேல் விழவும், புரிந்துக்கொண்டான் மனைவிக்கு தான் இப்போது தேவையாக இருக்கின்றோம் என்று. அவளது பக்கமாக திரும்பியவன்.

எதுவுமே பேசாமல் அவளது இடையில் கையைப்பேட்டவன், மெதுவாக வயிற்றிற்குள் கையை நுழைத்து தடவிக்கொடுக்க, தன் உதடுக்கடித்து கணவனிடம் அந்த சுகவேதனையை அனுபவிக்க... மெது மெதுவாக கைகளை கழுத்துக்கு கொண்டு சென்றவன் அப்படியே அவளது உதடுகளைப் பிடித்து இழுக்க, கண் திறந்தவள் ஷ்ரவனின் பார்வையோடு தன் பார்வையை கலக்க.

இருவரின் பார்வைகளும் ஒன்றோடொன்றுக் பேசியது... ஷ்ரவன் கண்களினால் என்னவென்று கேட்க அவளும் கண்களினாலயே ஒன்றுமில்லை என்று பதில் கொடுத்தாள்.

குனிந்தவன் தனது நாவினால் அவளது காதுமடலை தொட்டு தடவியவன் அப்படியே பற்களால் கடிக்க, கூச்சத்தில் நெளிய, இரண்டு பூ பந்துகளும் அவனது நெஞ்சின் மேல் முட்டி நிற்க, ஹப்பா அப்படியே தன் நெஞ்சைக்கொண்டு அழுத்த, தனது கரங்கொண்டு அவனது முதுகோடு தனது கரங்களை சுற்றிப்போட்டவள், தன்னோடு இன்னும் இறுக்கிக்கொண்டாள்.

“ரிது பேபி...” என்று கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்த்தவன், தனது நாவினால் அவளது உதட்டினில் கோலம்போட, ஹரிதாவோ அவனது நாக்கை கடித்து வைத்தாள்.

ஷ்ரவன் “ஏய்...கடிக்கணும்னா வேற இடத்துல கடிச்சி வைடி நாக்குல ஏன்டி கடிச்ச,” என்று அவளது நெஞ்சில் கடித்துவைத்தான்...

ஹரிதா சிரிக்கவும்... “எதுக்கு ரிது பேபி சிரிக்காங்க” தனது மீசையைக்கொண்டு, அவளது கழுத்தில் தேய்த்துக்கொண்டே கேட்க...

"இல்லை , நம்ம கடிச்சு கடிச்சு விளையாடுறோமே, இப்போ பாப்பா பார்ம் ஆகிட்டுனா... பிள்ளைப்பிறந்து எல்லோரையும் கடிக்கப்போகுது" என்று சிரிக்கவும்.

“இரண்டாவது பேபி ரெடி பண்ணுவமா” என்றவன், சட்டென்று அவளுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான்...

அவ்வளவுதான் ஹரிதா கணவன் மீதான மயக்கத்தில் தன்னை மறந்து அவனது ஆளுகைக்குள் சென்றாள்... இன்னும் வேண்டுமென்று அவனிடம் நெருங்கியவளின், உணர்வை புரிந்தவன், அவளது தேவைகளையும் நிறைவேற்றினான். எல்லாம் முடித்து சுத்தமாகி வந்து படுக்கையில் விழுந்தான்.

ஹரிதாவின் இதழ்களை இழுத்துவைத்து கடித்து வைத்தவன், “எதுக்கு இவ்வளவு மனசஞ்சலம் பேபி?..”

“உனக்கு என்னைத் தெரியும் எனக்கு உன்னைத்தெரியும்... அப்புறமெதுக்குடி கண்டக் கழுதைகள் சொன்னதையெல்லாம் மனசுகுள்ள வாங்குற... அந்த நெஞ்சுக்கூட்டுக்குள்ள நான் தான் இருக்கேனு எனக்குத் தெரியுமடி.

உன் நெஞ்சுக்குள் இருக்கும் அந்தக் காதல்தான்டி என்னை தட்டியெழுப்பிச்சு.

நீதான்டி எனக்கு எல்லாம்... உன் காதல் நெஞ்சம்தான்டி என் வாழ்க்கை. அதுபோதும்டி எனக்கு வேற எவ என்ன சொன்னாலும் எனக்கு பிரச்சனையில்லை.சாவுக்குப் பக்கத்துலப் போயிட்டு வந்துட்டேன்டி...

மியா என்ன சொல்லிருப்பானு எனக்குத் தெரியும் நீ அம்மாகிட்டக்கூட அதை சொல்லலைனா... கண்டிப்பா என்னத்தான் எதாவது சொல்லிருப்பா,இல்லேனா என்னோட ஆண்மையைப் பற்றி பேசிருப்பா... அந்த சீப் மைண்டிற்கு அதுதான் தெரியும்.

உண்மையான அன்பு, காதல்னா என்னனு, அப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்களுக்குத் தெரியாது பேபி... லெட்டஸ் என்ஜாய் அவர் லைஃப்...” என்றவனது கரம் தன் மனையாளை இழுத்து தனக்குள் அடக்கியவன்...

“என்கிட்ட சண்டைபோட்டு பட்பட்டென்று எதிர்த்துப்பேசுற அந்த ஹரிதா வேண்டுமடி பெண்ணே... நான் முதல் நாள் பார்த்த அந்த ஹரிதா வேண்டுமடி... என்னை உயிர்ப்போடு வாழ வைக்க அவள் வேண்டுமடி...” என்று அவளது வாசனையை முகர்ந்துக்கொண்டே பேசினான்.

அதற்குள் அவனது போனிற்கு அழைப்பு வரவும் எடுத்து பார்த்தவன் அஜய் என்றதும் “என்னடா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க என்ன விஷயம்” என்று கேட்கவும்

அஜயோ "இல்லடா பிள்ளைக்கு பெயர் வைக்கிற விஷயம்.எப்படி என்ன பண்ணனும்னு உன் கிட்ட கேக்கதான்.உனக்குதான் அனுபவம் இருக்கு அதுதான் " என்றான்.

“அதுசரி... என்ன செய்யனும்னு நீ ஐடியா வச்சிருக்க அத சொல்லு முதல்ல” என்று கேட்டவன்... சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு வந்தான்.

படுக்கைக்கு வந்தவனிடம் “ஹரிதா என்ன விசயம்” என்றுக்கேட்க "அஜய் பாவம்டா,சொந்தம் யாருமில்லாமல் இருந்தான்... இப்போதான் மனைவி பிள்ளைனு அவனுக்கும் ஒரு குடும்பம் வந்திருக்கு, அதை நினைச்சா சந்தோசமாகயிருக்கு.

பிள்ளைக்கு பெயர் வைக்கற பங்கஷனுக்கு ஐடியா கேட்டான்... என்று சொன்னான்...நம்மளையும் அழைச்சிருக்கான் போகணும்” என்றவன். அவளை தனது நெஞ்சில் போட்டுக்கொண்டு அப்படியே தூங்கிப்போனான்.

அடுத்தநாள் எழும்பும்போதே உற்சாகமாகவும், வீட்டிற்குள் புன்னகையுடன் வலம்வந்தாள் ஹரிதா... தனது மகளை கையில் வைத்துக்கொண்டே வீட்டில் அவள் அங்குமிங்கும் நடக்க... வீடே ஒருவித சந்தோஷ அலைகதிர் பரவுவதை உணர்ந்தான் ஷ்ரவன்.

ஆபிஸிற்க்கு செல்லும்போதே, தனது காலை வந்து பேபிவாக்கரில் இருந்துக்கொண்டே பிடித்துக்கொள்ளும் தனது மகளின் சிரித்த முகம் தரும் மகிழ்ச்சி நிம்மதி உலகில் எந்தப் பணத்தைக்கொண்டும் வாங்க முடியாது என்று உணர்ந்திருந்தான்...

அடுத்த வாரத்தில் மொத்தக் குடும்பமும் அஜயின் வீட்டினில் இருந்தனர்... கீதம்மாவின் கணவரும் வந்திருந்தார்..

அஜய்- காவ்யாவின் குழந்தைக்கு பெயர் வைக்க பிள்ளையை கீதாம்மாவின் கையில் கொடுத்து பெயர் வைக்க சொல்லவும்.அவருக்கோ ஆனந்த அதிர்ச்சி " நான் எப்படிடா” என்று குரல் தளுதளுக்க கேட்டவரிடம்...

“இந்த அனாதைக்கு அம்மாவான நீங்கதான்மா என் பிள்ளைக்கும் பெயர் வைத்து, அவனை என்னைப்போல வளர்த்துக்கொடுங்க” என்று அவரது கையில் குழந்தையைக்கொடுக்க.கீதாம்மாஅழுதுவிட்டார்.

அவர்தான் பிள்ளையின் காதில் " விஷ்ணு" என்று முன்று முறை கூறினார்... விழா முடிந்ததும்...

காவ்யாவுடன் வேலை செய்கிறவர்களும், அஜயின் ஆபிஸ் நண்பர்களும் வந்திருந்தனர். ஷ்ரவன் வீட்டினர் கிளம்பவும், அஜய் எல்லோர் முன்னடியும்,

“நான் இவ்வளவு தூரம் நல்லாயிருக்கேன்னா அதுக்கு இரண்டுபேர் காரணம் ஒன்னு கீதாம்மா, இன்னொன்று ஷ்ரவன். நண்பனுக்கு இலக்கணம் அவன்” என்று அவனைத்தோளோடு கட்டிக்கொண்டு எல்லோர் முன்னாடியும் சொன்னான்.

ஷ்ரவனும் அவனை கட்டிப்பிடித்து விடுவித்தவன்... சிரித்து விடைபெற்று அங்கிருந்து வீடு வந்தனர்.

வீடு வந்ததும் மகளது உடையை மாற்றவும், விழித்துக்கொண்டவள் தகப்பனின் கையிலிருந்துக்கொண்டு, ஹரிதாவை ஷ்ரவனைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை.

ஹரிதா " போடி, எனக்கு வந்த வில்லிடி நீ, என் ஷ்ரவனையே தொடவிடமாட்டுக்க” என்று மகளிடம் சண்டைப்போட்டாள்.

“பசிச்சா என்கிட்டதான வருவ” என்றதும், சட்டென்று அவளைப் பார்த்து கையைநீட்டி எடுக்க சொல்லவும், இருவருக்கும் சிரிப்பு வர...

" என் மகள் என்ன மாதிரிடி, நீதான் முக்கியம்னு புரிந்து வைத்திருக்கா பாரு...பொழைச்சுப்பா " என்று ஷ்ரவன் சொல்லவும், பால் குடித்துக்கொண்டிருந்தவள் தலையைத்திருப்பி தனது தகப்பனைப் பார்த்து தனது சிறிய நான்கு பற்களும் தெரிய சிரித்தாள்....

இதைவிடவாட ஒரு நிறைவான வாழ்க்கை வேண்டும் என்று தனது மகளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.

ஆயிரமாண்டுகள் வேண்டாமடி

ஆனந்த வாழ்க்கை வாழ

அன்பான உன் காதல் போதுமடி

ஒரு நொடியேனும் நிறைவாக வாழ

ஓ...என் காதல் நெஞ்சமே!!!

அத்தியாயம்-24

மூன்று வருடங்களுக்கு பின்பு ஷ்ரவன் தனது கேபினில் இருந்தான், தீவிரமாக ஒரு ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்றைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது,அந்த டென்சனில் இருந்தவன்...

ப்யூனை அழைத்து “மேனஜரை வரச்சொல்லுங்க” என்றான்.மேனேஜர் வந்ததும் "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும், ஒரு ஃபைலக்கூட சரியா ரெடி பண்ணத்தெரியாதா... இன்னைக்கு மீட்டிங்க் இருக்குத்தான... இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு இந்த ஃபைல் டீடயல் எல்லாம் வேணும்.”

“மேனேஜருக்கே பொறுப்புயில்லை” என்று கத்தியவன்.எதிரில் அமைதியாக இவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த மேனேஜரைப் பார்த்ததும், சிறிது அமைதியாகினான்.

இனிப்பேசினால் வேலைக்காகாது என்று " சரி சரி, சீக்கிரம் ரெடி பண்ணிக்கொடுக்க சொல்லுங்க ஸ்டாப்ஃஸ்கிட்ட” என்று தழைந்துப்போகவும்...

"அது அந்த பயம் இருக்கட்டும்" என்று அவனை முறைத்துக்கொண்டே போன மேனேஜர் வேறுயாருமல்ல, நம்ம ஹரிதாதான். வா மவனே வா... நைட் எங்கிட்டதான வந்தாகனும் என்ற பார்வை அது.

ஷ்ரவனும் “போடி போடி... உன் கைகால்ல விழுந்தாவது உன்னை சரிபண்ணிடமாட்டேன்” என்று அவன் சிரிக்க... ஹரிதாவோ முறைத்துக்கொண்டு சென்றாள்.

நேற்றிரவு நடந்தது நியாபகம் வந்தது, தகப்பனும் மகளும் நல்ல லூட்டி அடித்துக்கொண்டு, அவளை வேலை செய்யவிடாமல் படுத்தி எடுத்துவிட்டனர்... அதைவிட மகள் தூங்கியதும் வேலை செய்து கொண்டிருந்த ஹரிதாவின் அருகில் சென்றவன் அவள் கையிலிருந்து பைல் எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்துவிட்டு... வா தூங்கலாம் என்று அவளை குண்டுகட்டாக தூக்கி கொண்டு படுக்கையில் போட்டு விட்டான்.

ஹரிதாவோ “நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதோட ஃபைல் ரெடி பண்ணிட்டு இருக்கேன் விடுங்க” என்க.

“அது நாளைக்கு பாத்துக்கலாம்” என்று அவளை கெஞ்சி மிஞ்சி தனக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொண்டவன். இன்று வந்து வேலை செய்யவில்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் ஹரிதாவிற்கு, அதனால்தான் முறைத்துக் கொண்டே சென்றாள்.

மாலை வீடு வந்ததும் அவனிடம் பேசவே இல்லை ஹரிதா. தனது பிள்ளையின் பின்னாடியே சுற்றிக் கொண்டே இருக்க கடுப்பாகி விட்டான்.

அதற்குள் நிருபமா இருவரையும் அழைத்து “நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும், ஷன்மதி அட்மிஷனுக்க, ஏற்கனவே அப்பா அவங்க கிட்ட பேசிட்டாங்க” என்று சொல்ல.

ஷ்ரவன் கோபத்தில் முகம் திருப்பி இருந்தான்,பிள்ளையை ஸ்கூல் அனுப்பனுமா என்று.

நிருபாமா "அந்தந்த நேரத்துல செய்யவேண்டியதை சரியா செய்யனும், ஷன்மதி வீட்டுக்குள்ளவே இருக்கா.இனி ஸ்கூல் போகும்போது வேற சூழல் மாறும், பிள்ளைங்களோட பழகுற வாய்ப்புக் கிடைக்கும்.அவளை பாடம் படிக்கறதுக்காகவா அனுப்புறோம்.இங்க விளையாடுறத அங்கப்போய் நாலு பிள்ளைங்ககூட விளையாடப்போறா அவ்வளவுதான்" என்று ஷ்ரவனிடம் பேசியவர். “நாளைக்கு ரெடியாக இருங்க அப்பா அம்மதான் போகணும்.

அஜய்கிட்டயும் சொல்லிடு” என்றவர் தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

தனது மகளை தூக்கிக்கொண்டவன் தோட்டத்தில் சிறிது நேரம் உருண்டுப்புரண்டு விளையாடிவிட்டு அழுக்காக வரவும், பெரிய பிள்ளையை நிருபமாவும், சிறிய பிள்ளையை ஹரிதாவும் மிரட்டிக்கொண்டிருக்க.ஷ்ரவனும் ஷன்மதியும் குனிந்து கண்சிமிட்டி சிரித்துக்கொண்டனர்.

“பெருச சிறுசு கெடுக்குதா? இல்லை சிறுச பெருசு கெடுக்குதானுத் தெரியலை” என்று நிருபாமா அதட்டிக்கொண்டு உள்ளே சென்றார்... குளித்து முடித்து வந்த தகப்பனும் மகளும் மெதுவாக, ஹரிதாவிற்கு தெரியாமல் படுக்கையில் படுத்துவிட.சிறிது கழித்து வந்த ஹரிதாவோ அவர்களை கண்டுக்கொள்ளாமல் படுக்கபோக.மகள் தூங்கிவிட்டாளா என்று மெதுவாகத்தொட்டுப் பார்த்துவிட்டு மனையாளிடம் நெருங்க... அதை உணர்ந்து எழும்பியவள் தலையணையை கீழேப்போட்டு படுக்க. “ஐயயோ முதலுக்கு மோசமாகிட்டு” என்று சொன்னவன்.அவளது அருகில் வந்தவன்

"அடியே பொண்டாட்டி... இது நல்லாயில்ல"

ஹரிதா"எனக்கு நல்லயிருக்கு” என்று கவிழ்ந்துப் படுத்துவிட்டாள்

சிறிது நேரம் கழித்து அப்படியே அவளது மேலயே படுத்துவிட்டான்... அவ்வளவுதான் ஹரிதாவை அவன் வசம் கொண்டுவந்து , அவளோடு இணைந்தபின்தான் தூங்கினான்...

அடுத்தநாள் அந்தப் பெரிய பள்ளியின் வளாகத்தில் தனது காரை பார்க் செய்துவிட்டு, பிள்ளையுடன் ஷ்ரவன்- ஹரிதா உள்ளே செல்ல அவர்களுக்கு அங்கு ஏக வரவேற்பு, ஏற்கனவே அக்க்ஷராவின் பையன்களும் அங்கே படிப்பதாக செய்திருந்தனர். அந்த பள்ளிக்கு உள்ளே சென்றவர்கள் ஷன்மதியை ப்ரீ கேஜி வகுப்பில் சேர்த்து விட்டனர். அதற்குள்ளாக அஜயும் காவ்யாவும் தாமதமாகவே வந்து சேர்ந்தனர்.

கவ்யாவின் கையில் இப்பொழுது ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது... இந்த விஷயத்தில் ஷ்ரவனை விட அஜய் லீடிங்கில் சென்று கொண்டிருந்தான்... ( அஜயின் பிளானோ அரை டஜன் பெத்துக்கணும்னு, காவ்யாவோ ஆளைவிடுறா சாமி என்று சொல்லிருக்கிறாள்...பார்ப்போம் அஜயின் கொள்கை நிறைவேறுமா என்று).

அவனுது மகன் விஷ்ணுவையும் அதே பள்ளியில் சேர்த்துவிட்டனர்.ஷன்மதியும் விஷ்னுவும் அருகருகே அமர்ந்க்கொள்ள,

விஷ்ணுவின் கையிலிருந்த சாக்லேட்டின் கவரை அழகாகப் பிரித்து அவனுக்கு கொடுத்த ஷன்மதி தானும் பிரித்து வாயில் போட்டுக்கொண்டு.அந்த பேப்பரை எடுத்து குப்பைத்தொட்டியை தேடிக்கொண்டு போட்டுவிட்டு வந்தவள்...

தானாகவந்து தகப்பனின் மடியில் அமர்ந்துக்கொண்டாள்.

"எப்படி என் பொண்ணு பாரு,” மீசையை முறுக்கிக்கொள்ள.ஹரிதா “ம்க்கும்” என்று நொடித்துக்கொண்டாலும் உள்ளுக்குள் சந்தோஷம், தனது கணவனைப்போலவே மகளும் என்று.ஆமா ஷ்ரவனுக்கு எதிலும் எங்கம் சரியாக ஓழுங்காக இருக்கவேண்டும்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு அங்கே அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும், வருத்தமாக இருந்தாலும், எதுவும் பேச விருப்பமில்லாமல் தங்களது அறைக்கு சென்றுவிட்டனர்... மதியத்திற்குமேல் ஆபிஸ் செல்லவேண்டுமாதலால்.

வந்தது யாருமில்லை மியாதான் வந்திருந்தாள்... ஷ்ரவனும் ஹரிதாவும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல சென்றது, அவ்வளவு கோபத்தை அவளுக்கு உண்டாக்கியது இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் நல்ல பிள்ளை போல அமர்ந்து கொண்டாள்... இப்போது அவளுக்கு வேறு வழி இல்லை அதனால்...

திருமணமாகி ஒரே மாதத்தில் எல்லா விஷயங்களும் அவள் கணவனுக்கு தெரிய வந்திருந்தது.விவாகரத்து கேட்பதற்காக தான் மியாவின் பெற்றோரை வரச் சொல்லி அவளது கணவன் பேசி இருந்தான்.

எல்லோரும் மன்னிப்புக்கேட்டு, கொஞ்சம் பணமும்கொடுத்து சரிசெய்திருந்தனர்.

பெரியவர்கள் அறிவுரைபடி அவளை சென்னையில் உள்ள தனது தாயுடனே இருக்கும்படி கொண்டு வந்து விட்டுவிட்டான்.

அதில்வேறு மூன்று வருடம் ஆகியும் அவளுக்கு குழந்தையில்லை, தினமும் மாமியாரிடம் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்.திருமணத்திற்கு முன்பாக அவள் செய்த பெரிய பாதகச் செயல் இப்பொழுது அவளுக்கே திரும்பியிருந்தது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நிறைய முறை மாத்திரைகள் மூலம் கருக்கலைப்பு செய்து இருந்ததால் அதனுடைய பலன் இப்பொழுது வெளிப்பட்டது.குழந்தைக்கான ட்ரீட்மென்டில் இருக்கிறாள் அதனால் அவளுடைய உடல் முன்பு போல் இல்லை.சதைப்போட்டு ஏதோ நானும் வாழ்கிறேன் என்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.

மாமியாரின் அதிக குத்தல் பேச்சு காரணமாக சில நாட்கள் இங்கு வந்து இருப்பதும் உண்டு அப்படித்தான் இன்றும் வந்திருந்தாள்.சிறிது நேரம் நிருபமாவிடம் பேசிக்கொண்டிருந்தவள் கிளம்பி சென்றுவிட்டாள்.

மதியம் சாப்பிட்டு, வேலைக்கு செல்ல கிளம்பியவன், “எதுக்குமா மியாவை இங்க வரச்சொல்றீங்க,வரவேண்டாம்னு சொல்லிடுங்க” என்றான்.

“ஷ்ரவன் நீ பேசறது சரியில்லை, ஒருத்தங்க கஷ்டத்துல இருக்கும்போது நம்ம அரவணைக்கனும்,அதுதான் பண்பு புரியுதா..” என்றார்.

கையெடுத்துக் கும்பிட்டவன், “அம்மா தாயே உங்க கான்செப்ட் எதுவும் எனக்கு புரியாது... என்னை விட்ருங்க” என்றவன் கிளம்பிவிட்டான்.

பள்ளியில் சேர்ந்த மூன்றாவது நாளே புகார் பெட்டியோடு வந்திருந்தாள் ஷன்மதி. ஹரிதாவிடமிருந்து பிள்ளையை அடி வாங்காமல் காப்பதற்காகவே ஆளாளுக்கு ஷன்மதியை தூக்கிக்கொண்டு அழைந்தனர்.

ஹரிதா கணவனிடம் சொல்லிவிட்டாள் “நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன், உங்க புள்ளை என்ன சேட்டை பண்ணிருந்தாலும் நீங்களே பாத்துக்கோங்க” என்று சொல்லி விட்டுவிட்டாள்.

ஷ்ரவன் ஷன்மதியோடு பள்ளி முதல்வரை பார்க்க காத்திருக்க அவனது அருகில் யாரோ வந்து உட்காருவதை பார்த்து திரும்பியவன் அதிர்ந்தான் அங்கு அஜய் தனது மகனுடன் அமர்ந்திருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து “நீயுமாடா!” என்று கேட்டுக்கொண்டனர் முதல்வர் அறைக்கு சென்றதும்தான் தெரியும் என்ன நடந்தது என்று.

விஷ்ணுவை ஒரு பையன் தள்ளிவிட, தள்ளிவிட்ட பையனை சன்மதி கடித்து வைத்திருந்தாள்.முதல்வரிடமும் அந்தப் பையனின் பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டு வெளியே வரவும் இருவரும் தங்களது சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தனர்.

நம்மளைப் போல நம்ம பிள்ளைகள் நல்ல நண்பர்கள் என்று சந்தோஷ மிகுதியில் சிரித்துக்கொண்டனர்.

அஜய் வீட்டிற்கு செல்ல அங்கு காவ்யாவின் அம்மா வர்திருந்தார்... காவ்யாவிடம் சென்று “என்ன” என்று கேட்க.

அப்பா இறந்ததும் அங்க கவனிக்க யாருமில்லை.இவள் ஒரே பெண் என்பதால்

தன்னோடு பெங்களூருக்கு வருமாறு அழைக்க வந்திருந்தார், குடும்பத்தோடு வரச்சொல்லியிருக்கிறார்.

இதை காவ்யாஅஜயிடம் சொன்னதும் “அம்மாவக் கண்டவுடனே பாசம் பொங்கிட்டு அப்படித்தான.என்ன உங்க அம்மாவோடு போகறதுக்கு முடிவே பண்ணிட்ட போல” என்றவன், “என் பிள்ளைங்களை எங்கிட்ட கொடுத்துவிட்டு நீ வேணும்னா போ” என்று வார்த்தைகளை விட்டுவிட்டான்.காவ்யா இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை அஜயிடமிருந்து.

அவர்களின் சத்தம் கேட்டு உள்ள வந்த கீதம்மா சத்தம்போட்டார். “என்ன பழக்கம் அஜய் இது.இவ்வளவு சத்தமா சண்டைப்போடுற பழக்கம் என்ன.”

“அவங்களோட உரிமை, அழைக்கிறாங்க,போறதும் போகாததும் உங்க இஷ்டம்... எதுக்கு சண்டைபோடனும்” என்றார்.

காவ்யா தனது அம்மாவிடம் “நீங்க இங்க வாங்க, பிள்ளைகளோடு இருங்க ஆனா நாங்க அங்க வரமாட்டோம், உங்க வீட்டுக்காரர் செய்த பாவம் அவனோடவே போகட்டும் அந்த பாவத்தின் சாயல்கூட எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் வேண்டாம்” என்று உறுதியாக சொல்லிவிடவும்.வேறு வழியின்றி பேரப்பிள்ளைகளோடு இரண்டு நாள் இருந்துவிட்டு பெங்களூருக்கே மறுபடியும் திரும்பி சென்றுவிட்டார்.

காவ்யாவிற்கு வருத்தம் அஜய் இப்படிக்கூட பேசவானா என வருத்தத்தில் இருந்தாள்... அவளை சமாதனப்படுத்துவதற்குள் அஜய் ஏன்டா பேசினோமா என்று நொந்துபோய்விட்டான்.

ஹரிதா எப்படி பேசுவாளோ அதே மாதிரிதான் ஷன்மதியும் பேசுவாள்... ஒரு விசயத்தில் மட்டும் மாற்றம், ஹரிதாவைப்போல அவசரப்பட்டு பேசமாட்டாள், மகள் நியாமாக பேசுவாள்... வாரத்திற்கு ஒரு முறை பள்ளியில் முதல்வர் அறைக்கு சென்று வருவான் ஷ்ரவன்... அவ்வளவு புகழ் ஷன்மதிக்கு பள்ளியில்.

ஒரு நாள் கம்பேனியில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போதே லேசாக வாந்தி வருவதுப்போல இருக்கவும், ஹரிதா

எழும்பி வாஷ்ரூம் சென்றுவந்தவள் அமைதியாக இருந்து யோசித்தவளனு கண்ணகள் இப்போது பளீரென்று மின்ன அவசரமாக யாரு இருக்கா என்று பார்க்கமலயே ஷ்ரவனின் கேபினுக்குள் செல்ல, அங்கு பிஸினஸ் டீலிங்கிற்கு பேச அமர்ந்திருந்தவர்கள் இவளை வித்தியாசமாகப் பார்க்க.

ஷ்ரவன் " மீட் மை வொய்ஃப் ஹரிதா... அவர் மேனஜர்" என்று அறிமுகப்படுத்தியவன்... அவளை அங்கயே இருக்க சொல்லி கைகாட்டியவன்,பேச்சுவார்த்தை முடிந்து வந்திருந்தவர்கள் சென்றதும்.

“என்ன முக்கியமான விசயம் அவ்வளவு வேகமா வந்த” என்று அவளை தனது மடியில் அமரவைத்து, அவளது கழுத்தில் கையை வைத்து விளையடியபடியே பேச.... கூச்சத்தில் நெளிந்தவள், “என்னை பேசவிடுங்க இல்லைனா நான் எழும்பி போய்டுவேன்...” என சிணுங்கவும்.

“ம்ம்... சொல்லு” என்றவன்... இப்போதும் அவளது வயிற்றில் கைவைத்து தடவிக்கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து எழுந்து பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள். “இப்படி இராத்திரியும் பகலும் பொண்டாட்டிக்கிட்ட விளையிடிக்கிட்டிருந்தா... என்னாகும்?...”

“என்னாகும் ரிது பேபி...?...”

“செய்யறதெல்லாம் பெரியவேலை,

அப்புறம் ஒன்னுமே தெரியாத மாதிரி என்னாகும் பேபினு கேட்கவேண்டியது...”

என்று அவனிடம் முறைத்துக்கொண்டவள். “மறுபடியும் வாந்தி மயக்கம் வர வச்சுட்டீங்க” என்றதும்.

திரும்பி பார்த்து “என்ன?” என்றான் ஷ்ரவன்.

அவனதருகில் வந்து, அவனது தலையை தன் வயிற்றோடு சேர்த்து வைத்துக்கொண்டவள், “குட்டி ஷ்ரவன் வரப்போறான்” என்று சொல்லவும், அப்படியே அவளை அண்ணார்ந்துப் பார்த்து “அப்படியா” எனக் கண்ணையும், வாயையும் விரித்துக் கேட்க... ஆமா என்று தலையாட்டவும் இன்னும் அவளது வயிற்றில் தலயைவைத்து அழுத்தியவன்.

அப்படியே அவளது சேலையை விலக்கி வெண்ணெய் போன்று வளவளவென்றிருக்கும் அவளது அடிவயிற்றில் முத்தம் வைத்தான்...

ஹரிதாவிற்கோ அந்த முத்தத்தில் உயிரெல்லாம் பூ பூத்தது...

ஹரிதாவை அழைத்துக்கொண்டு காவ்யா வேலை பார்க்கும் அந்த புகழ்பெற்ற மருத்துவமனைக்கு வர காவ்யா விடுமுறையில் இருந்தாள்... இருவருக்குமே யோசனை எதுக்கு விடுமுறை எடுத்து இருக்கா என்று இருந்தாலும் வீட்டிற்குப் போய் அஜய்க்கு அழைத்து கேட்போம் என்று இப்போது வந்த வேலையை கவனித்தனர். எல்லா பரிசோதனையும் முடிந்து ரிப்போர்ட்டுகள் வாங்கி வீடு வந்து சேர்ந்தனர்...

வீட்டில் அனைவரிடமும் இந்த செய்தியை சொல்லவும் எல்லாருக்கும் சந்தோஷம். இரவில் மெதுவாக ஷன்மதியிடம் விஷயத்தை கூறவும், சிறிது யோசித்தவள் “தம்பி பாப்பா என்கூட விளையாடுவானா?..” என்று அதிமுக்கியமான கேள்வி கேட்கவும், “ஆமாடா” என்று அவளுக்குத் தக்க பதில் கூறியதும் “அப்போ சரி” என்று தந்தையின் மீது காலை போட்டுகொண்டு தூங்கிவிட்டாள்.

இருவருக்கும் ஷன்மதியை எப்படி சமாளிப்பது என்றுதான் ஒரே சிந்தனை இப்பொழுது அவளோ... அதற்கு இடம் கொடுக்காமல் ஏற்றுக்கொண்டாள்.

ஷ்ரவனிடம் “நான் காவ்யாக்கு போன் பண்ண எடுக்கவே இல்ல போன் சுவிட்ச் ஆப்னு வருது அஜய் அண்ணாவுக்கு போன் செய்தீங்களா” என்று ஹரிதா கேட்கவும்..

ஷ்ரவன் ஒரு மார்க்கமாக பார்த்து சிரிக்க அருகில் வந்தவள் "என்ன விசயம்"

அவனோ மூன்று விரலை விரித்து சைகை செய்ய.புரிந்துக்கொண்டவள், “காவ்யா பாவம்பா.”

“அஜய் தீயா வேலை செய்யுறான் பாரு... நம்மதான் ரொம்ப ஸ்லோப்பா, அவனை முந்தனும்” என்றவனது கையை கிள்ளி வைத்து “பிச்சிருவேன்.இதோட ஸ்டாப் அடுத்ததுக்கெல்லாம் வாய்ப்பில்லை” என்றாள்.

அதைக்கேட்டவன் பாவம்போல முகத்தை வைக்க. “இந்த ஆக்டிங்கலாம் நம்மகிட்ட செல்லாது, போய்படுங்க” என்றவளை தன்னோடு சேர்த்தணைத்து படுத்தவன்.

“நான் செத்துப்போயிருந்தா மூணுவருசம் ஆகிருக்கும்... ஆனா இப்போ எனக்கு உயிரும் தந்து, புதுசா என் மூலமா ஒரு உயிரையும் உருவாக்கவச்சுட்ட நீ...” என்று அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன் நிம்மதியாக தூங்கினான்...

ஷ்ரவனின் தலையை கோதிக்கொடுத்தவள், மகளை எடுத்து சரியாகப் படுக்கவைத்துவிட்டு,கணவனின் நெஞ்சில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள் இருவரின் உலகமும் ஒன்றுதான்... உடல் இரண்டு என்றாலும்... உயிர் இரண்டும் ஒன்றாக பின்னிப்பிணைந்து ஒன்றாக இருந்தது.

மகளின் விசயம் கேள்விப்பட்டு ஹரிதாவின் பெற்றோர் இங்க வந்திருந்தனர் அவளைப் பார்ப்பதற்கு.ஆம் ஹரிதா ஷ்ரவனின் அந்த விபத்திற்கு பின் பெங்களூர் செல்லவேயில்லை.ஷ்ரவன் வற்புறுத்தியும் வரமாட்டேன் என்றுவிட்டாள்.

ஒவ்வொரு முறையும் கிருஷ்ணாவும் சுமித்ராவும்தான் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.

ஷ்ரவன் "வயசானவங்கடி, உனக்காக இவ்வளவு தூரம் வர்றாங்க... இந்தமுறை குழந்தைபிறந்த பிறகு நம்ம ஃபிளாட்டுக்குப் போயிட்டு வரணும்,நீ என்கூட வர்ற... அப்படி என்ன பயம். அடிபட்ட நானே திரும்பவந்து தைரியமாக இருக்கேன்" என்று வருத்தத்தோடு பேசினான்.

இவ்வளவு நாள் கழித்து ஹரிதா தனது மனதில் உள்ளவைகளை கூறினாள்

"உங்களுக்கென்னப்பா,நீங்க உணர்வற்று படுத்திருந்தீங்க அவ்வளவுதான்.

ஒவ்வொரு நாளும் உங்க பக்கத்துல உட்கார்ந்துகிட்டு கொஞ்சம் மூச்சு வேகமாவிட்டாலும்,பயந்து மருகியது எனக்குத்தான் தெரியும், ஒவ்வொரு முறையும் தொண்டையில போட்டிருந்த ட்யூப் வழியாக உணவு கரைச்சு ஊத்தும்போது... வலியில் உங்கமூச்சு மேலும் கீழும் வேகமா வந்துப்போகும்போது... விட்டுட்டுப் போயிடுவீங்களோனு பயந்து நடுங்கியது எனக்குத்தான தெரியும்... அதை நினைச்சா இப்பவும் உடம்பெல்லாம் பதறுது” என்று அவன்மேல சாய்ந்தவளின் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன்.

அப்படியே அவளது முதுகை வருடிக்கொடுத்து “ரொம்ப எமோஷனல் ஆகாதடா” என்று சமாதானப்படுத்தினான்.

நாட்கள் ஓடியது இப்போது ஏழாவது மாதம் வீட்டிற்கு மட்டும் வைத்து சிறிதாக... வளையல் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

எல்லாரும் வந்திருக்க மியாவும் வந்திருந்தாள்... யாரும் அவளை ஒதுக்கி வைக்ககூடாது என்பதினால் அவளையும் அழைத்திருந்தார்.

மியா வந்ததும் இன்றுதான் ஹரிதா அவளை “வாங்க” என்று அழைத்தாள்...

மியாவோ தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்... அன்று ஹரிதாவிடம் "கோமாவுல இருந்து எழும்பி வந்திருக்காரே ஷ்ரவன், அந்த விசயத்துல எப்படி,எல்லா பார்ட்ஸ்சும் இருக்கா உனக்கு திருப்தியா இல்லைனா என்ன பண்ணுவ...வேற யாரையாவது பிடிச்சுக்குவியா” என்று அசிங்கமாக கேட்டாள்.இன்றோ அவள் கணவனுடன் நன்றாக வாழ்ந்து இரண்டாவதும் தாயாகப் போகிறாள். இங்கோ தரிசாக கிடக்கு என்று வெம்பினாள்...

விழாவும் முடிந்து வெளியே போகும்போது ஹரிதா ஷ்ரவன் ஜோடியைப் பார்த்து ஏங்கிக்கொண்டே சென்றாள்.

தினமும் மகள் தனது தாயின் வயிற்றைத் தொட்டு தினமும் கேட்பாள்.”பாப்பா எப்போப்பா வரும்” என்று... “சீக்கிரம்டா” என அவளுக்கு பதில் சொல்லியே அழுத்துவிட்டான்... ஷ்ரவன்.

இப்பொழுது மருத்துவமனையில் அறுவைசிகிக்சை அறையில் ஹரிதா இருந்தாள்.

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து நர்ஸ் வந்து பிள்ளையைக்கொண்டு கொடுக்க,

ஹப்பா ஷ்ரவனின் கண்களில் ஒளி தன் மகனைப் பார்த்ததில்.

பூப்போன்று ரோஸ்கலரில் மெதுவாக கை காலை அசைத்து நெளிந்துக்கொடுக்கவும், தொட்டுப்பார்த்தான் என்ன மென்மை.கண்ணை திறக்கமுடியாமல் லேசாக திறக்க முயற்சிக்க,

விழித்திருந்த ஷன்மதி “நானும் நானும் தொடணும்” என்று ஆர்பாட்டாம் செய்ய.அவளையும் தொட வைத்து, சந்தோஷத்தின் எல்லையை தொட்டு நின்றான் ஷ்ரவன்....

உயிரோவியாமாக மகனை கையிலேந்தி மனையாளுக்காக காத்திருந்தான்...

இந்தபக்கம் தனது மகள் ஷன்மதியுடன். ஹரிதாவை பார்க்கும் வரை சிறிது பதட்டத்துடன் காத்திருந்தவன், அவளை அறைக்கு மாற்றவும் உள்ளே சென்றவன், கண்டது மயக்கத்தில் இருந்த மனையாளின் முகத்தை தூக்கி முத்தமிட்டவன்... அவள் முழிக்கும்வரை காத்திருந்தான். நிர்மலமான அவளது முகம் ஷ்ரவனை ஈர்த்தது... என்னவள், என் உயிர் என்று அன்பு பிராவாகமாக அவனது உயிரிலிருந்து எழுந்தது...

ஷ்ரவன்- ஹரிதாவின் வாழ்வை நிறம்மாறா காதலினைகொண்டு வாழ்கை எனும் வானவில்லை உருவாக்கியிருந்தனர்...

அன்பு, காதல், பாசம், என்பவை வண்ணங்களாக...

                                                                            ************சுபம்*************